ஆட்சியாளர்கள் மாநாடு – அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட்டது

நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெறவிருந்த, மலாய் ஆட்சியாளர் மன்றக் கூட்டம் அக்டோபர் 27ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டதாக ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 28-ம் தேதி, மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சருடனான சந்திப்புகளும், ஜூன் 29 அன்று நடந்த ஆட்சியாளர்கள் கூட்டத்துடன் இணைந்து, சபைக்கு முந்தைய கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டன.

ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, மலாய் ஆட்சியாளர் மன்றத்தின் 259-வது கூட்டம், அக்டோபர் 27 மற்றும் 28 ஆகியத் தேதிகளில் நடைபெறும், அதே நேரத்தில் சபைக்கு முந்தைய கூட்டம் ஒரு நாள் முன்னதாக நடைபெறும்.

அக்டோபர் 25-ல், மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சருடன் சந்திப்பு நடைபெறும்.

கடைசியாக ஆட்சியாளர்களின் மாநாடு ஜூன் 16-ம் தேதி, இஸ்தானா நெகாராவில் யாங் டி-பெர்த்துவான் அகோங்குடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலின் போது கூடியது.

ஆகஸ்ட் 1-ம் தேதி, அவசரகால முடிவுக்கு முன்னதாக பல்வேறு பிரச்சினைகள் குறித்த தங்கள் கருத்துக்களைக் கேட்க, ஜூன் 9 முதல் 15 வரை பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் கட்சித் தலைவர்களை மாமன்னர் சந்தித்தபின் இது நடைபெற்றது.