வயிற்றுப்போக்கு காரணமாக பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

வயிற்றுப்போக்கு காரணமாக, பிரதமர் முஹைதீன் யாசின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இத்தகவலைப் பிரதமர் அலுவலகம், இன்று காலை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தது.

“பிரதமர், நேற்று முதல் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்க விரும்புகிறது.

“இதன் விளைவாக, அவர் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக, இன்று காலை தலைநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம், முஹைதீன் சிங்கப்பூரில் புற்றுநோய்காக சிகிச்சை பெற்றார் என்ற ஊகம் பரவியது.

இருப்பினும், பிரதமர் அலுவலகம் அதனை மறுத்தது.

2018-ஆம் ஆண்டில், கணையப் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிக்க, முஹைதீன் சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு, முஹைதீன் தனது உடல்நிலை குறித்து விளக்கினார், அவர் இன்னும் தனது வேலையைச் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறினார்.