சிலாங்கூரில் பெரும்பாலான கோவிட் -19 திரளைகள் தொழிற்சாலை சார்ந்தவை – எம்.பி.

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருட்டின் ஷாரி, மாநிலத்தில் கோவிட் -19 தொற்றின் கிட்டத்தட்ட அனைத்து திரளைகளும் பணியிடம் சார்ந்தவை என்றும், அது சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு முரணாக தோன்றுகிறது என்றும் கூறினார்.

மாநிலத்தில் கோவிட் -19 தொற்றுகளில் பெரும்பாலானவைக், குறிப்பாக தொழிற்சாலை சார்ந்த பணியிடத்திலிருந்து வந்தவை என்ற அமிருட்டின், இருப்பினும் பெரும்பாலான நேர்வுகள் குறிப்பிட்ட திரளைகளுடன் தொடர்புடையவை அல்ல என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.

அமிருடினின் அலுவலகம் தர்போது அவரது உரைக்கு ஒரு திருத்தத்தை அனுப்பியுள்ளது, அது இப்போது இப்படி கூறுகிறது :

“இன்று ஏராளமான நேர்வுகள் பணியிடத் திரளைகளிலிருந்து உருவாகியவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம், அதனை ஒப்புக்கொள்ள வேண்டும்.

 “சமீபத்திய புள்ளிவிவரங்கள் ற்றும் தரவுகளின்படி (ஜூன் 2021), சிலாங்கூரில் 91 விழுக்காடு திரளைகள் பணியிடங்கள் சார்ந்தவை, அதாவது 80 விழுக்காடு உற்பத்தி திரளைகல் மற்றும் 11 விழுக்காடு கட்டுமானத் தளக் திரளைகள், இந்த இரண்டு துறைகளிலிருந்தும் 125 திரளைகள் பதிவாகியுள்ளன, என்று “சிலாங்கூர் தடுப்பூசி” (செல்வாக்ஸ்) திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியபோது அவர் கூறினார்.

முன்னதாக, செல்வாக்ஸை அறிமுகப்படுத்தியபோது, ​​மாநிலத்தில் 91 விழுக்காடு நேர்வுகள் – திரளைகள் அல்ல – பணியிடத் திரளைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அமிருட்டின் தெரிவித்திருந்தார்.

தரவுகளின் காலவரிசையையும் அவர் குறிப்பிடவில்லை.

உரையின் முந்தையப் பதிப்பானது, சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு முரணானது, இது மலேசியாவில், குறிப்பாக சிலாங்கூரில், கோவிட் -19 நேர்வுகள் மிகக்குறைவானவை என்பதைக் காட்டியது.

இது முந்தைய தொற்றுநோய்களுக்கு முரணானது, அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திரளைகளுடன் ஏராளமான நேர்வுகள் தொடர்புடையவை.

சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மலேசியாவில் பெரும்பாலான கோவிட் -19 நேர்வுகள் குறிப்பிட்ட திரளைகளில் கண்டறியப்படுவதை விட, அவ்வப்போதைய நேர்வுகள் என்று முன்னர் கூறியிருந்தார்.

ஜூன் 1-ம் தேதி ஓர் அறிக்கையில், நூர் ஹிஷாம், ஜனவரி 1 முதல் ஜூன் 19 வரை மலேசியாவில் பதிவான 578,105 கோவிட் -19 நேர்வுகளில் 396,846 (69 விழுக்காடு) பரவலான நேர்வுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சிலாங்கூரில் மற்ற மாநிலங்களை விட அதிக எண்ணிக்கையிலான நேர்வுகள் பதிவாகியுள்ளன, இந்தக் காலகட்டத்தில் பதிவான மொத்த 194,062 நேர்வுகளில் (78 விழுக்காடு) 151,725 சிலாங்கூரில் ​​உள்ளன.

இதன் பொருள், மாநிலத்தில் 22 விழுக்காடு நேர்வுகளை மட்டுமே திரளைகள் அல்லது இறக்குமதி நேர்வுகள் போன்ற பிற ஆதாரங்களுடன் இணைக்க முடியும்.

அண்மையில், சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி சுகாதார அமைச்சின் தரவை மேற்கோள் காட்டி, கோவிட் -19 நேர்வுகளில் ஐந்து முதல் 10 விழுக்காடு மட்டுமே உற்பத்தித் துறையிலிருந்து வந்ததாகக் கூறினார்.

இது சிலாங்கூரில் தொற்றுநோய்கள் மட்டுமல்லாமல், நாடு தழுவிய தரவைக் குறிப்பதாகத் தெரிகிறது.

கோவிட் -19 நேர்வுகளில் 25 விழுக்காடு மட்டுமே குறிப்பிட்ட திரளைகளிலிருந்து வந்தவை என்றும், மீதமுள்ள 75 விழுக்காடு குறிப்பிட்ட திரளைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுகாதார அமைச்சின் தரவை மேற்கோள் காட்டினார்.