கிளேன்மேரி சம்பவம் : ‘மண்டியிட்டிருந்த போது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ – வழக்கறிஞர்

நவம்பர் 13, 2010 அன்று, ஷா ஆலம், க்ளென்மேரியில் முஹம்மது ஷாமில் ஹஃபீஸ் ஷாபீ, 15, மொஹமட் ஹய்ருல் நிஸாம் துவா, 22, மற்றும் முகமது ஹனாஃபி ஒமார், 21, ஆகியோர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆரம்பத்தில், மான்தெராஸ் மற்றும் புக்கிட் சுபாங்கில் பெட்ரோல் நிலைய கியோஸ்க்களைக் கொள்ளையடிக்க முயற்சித்த பின்னர், அவர்கள் ஆயுதம் ஏந்திய அவர்கள், போலீசாரைத் தாக்க முயன்றதாகவும் போலிசார் கூறினர்.

எவ்வாறாயினும், அந்த நேரத்தில் மூன்று இளைஞர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மனித உரிமை வழக்கறிஞர் என் சுரேந்திரன், உடற்கூறு சோதனை அறிக்கை போலிஸ் அறிக்கைகளுக்கு முரணாக இருக்கிறது என்றார்.

“சம்பந்தப்பட்ட இளைஞர்கள், தங்களைத் தாக்கியதால், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது என்று போலிசார் கூறினர்.

“இருப்பினும், உடற்கூறு அறிக்கையானது தோட்டாக்களின் ஊடுருவலின் கோணம், துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை மற்றும் அவை சுடப்பட்ட தூரம் ஆகியவை காவல்துறையினரால் விவரிக்கப்பட்ட சம்பவத்திற்கு முரணானவை என்பதைக் காட்டுகிறது.

“உடற்கூறு சோதனையில் போலிஸ் பதிப்பு (அறிக்கை) உண்மையல்ல, நடந்தது என்னவென்றால், இளைஞர்களை மண்டியிடச் சொல்லி, அவர்களின் சட்டைகளைத் தலைக்கு மேல் இழுத்து மூடி, சம்பவ இடத்தில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்,” என்று சுரேந்திரன் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

“ஷாமிலுக்குள் ஊடுருவியக் குண்டுகளிலிருந்து ஏற்பட்ட காயம் 45 விழுக்காடு கோணத்தில் இருந்தது, இதனால் அவர் உண்மையில் மண்டியிட்டிருந்தார் இருந்தார் என்பது நிரூபணமாகிறது. அவரது சட்டை மீது எஞ்சிய சூடுகள் இருந்தன, அது குண்டு நெருங்கிய தூரத்தில் இருந்து சுடப்பட்டதைக் காட்டியது,” என்று அவர் மேலும் கூறினார்.

அப்போது 15 வயதாக இருந்த ஷாமில், தலையில் பலத்த துப்பாக்கிச் சூடு உட்பட ஏழு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார், அதே நேரத்தில் 20 வயதான ஹைரூலுக்கும் அவரது தலை, மார்பு மற்றும் அடிவயிற்றில் மூன்று துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டன, ஹனாஃபி தலையிலும் மார்பிலும் ஏழு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகி இறந்தார்.

மூன்று சிறுவர்களின் குடும்பங்களுக்கும், ஷா ஆலாம் உயர்நீதிமன்றம் RM1.5 மில்லியன் இழப்பீடு வழங்கிய பின்னர் சுரேந்திரன் இதனைக் கூறினார்.

2013 நவம்பரில், அம்மூன்று குடும்பங்களும் காவல்துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகள், நீண்ட செயல்முறைக்குப் பின்னர் ஒரு முடிவை அடைந்தன.

அக்குடும்பத்தினர் தாக்கல் செய்த சிவில் வழக்கை, 2015-ல் ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் 2016, ஆகஸ்டில் தனது முடிவில் ஒருமனதாக மரணத்திற்குக் காரணமாகப் போலிசாரையும் அரசாங்கத்தையும் பொறுப்பேற்க செய்தது.

அவருக்குத் தெரிந்தவரை, இதுபோன்ற கொலைகளுக்குக் காரணமாகப் போலீஸ் அதிகாரி மீது வழக்குத் தொடரப்பட்டதில்லை என்று சுரேந்திரன் கூறினார்.

“எனக்குத் தெரிந்தவரை, அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தண்டித்ததில்லை, அல்லது செயல்முறை மிகவும் மெதுவாகவும் நம்பமுடியாததாகவும், கால ஓட்டத்தில் அந்த அமைப்பிலிருந்து மறைந்துவிடும்.

“பல வழக்குகள் இன்னும் இருக்கின்றன, காவல்துறையினர் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதாரங்களைச் சேகரிக்கும் சுயாதீன அமைப்பு எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.

க்ளேன்மேரியில் அந்தச் சம்பவத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், ஏப்ரல் 2010-இல், தனது சகோதரியின் காரில் பயணித்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட அமினுல்ராஸிட் அம்ஸாவின் மரணத்தையும் சுரேந்திரன் விவரித்தார்.

“ஜெனாயின் சுபி ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டார், உயர்நீதிமன்றத்தில் அவர் 20 தடவைகளுக்கு மேல் சுட்டு கொன்றதற்கான சான்றுகள் காட்டப்பட்டன. ஜெனெய்னுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பின்னர் கைவிடப்பட்டன, எனக்குத் தெரிந்தவரை, பல உயர் சுயவிவர வழக்குகள் இருந்தபோதிலும், ஒருவர் மீது நீதிமன்றத்தில் பொறுப்புக் கூறப்படுவது இல்லை,” என்று அவர் கூறினார்.