நேற்றைய நிலவரப்படி 2,309,018 பேர் இரண்டாவது மருந்தளவை நிறைவு செய்தனர்

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ், நாட்டில் இதுவரை மொத்தம் 8,083,685 மருந்தளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கையில், முதல் மருந்தளவை 5,774,667 பேரும், 2,309,018 பேர் இரண்டாவது மருந்தளவையும் பெற்றுள்ளனர், இதன்வழி அவர்களின் தடுப்பூசி நிறைவடைந்துள்ளது.

“மொத்தம் 258,773 மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, இதில் 163,756 முதல் மருந்தளவுகளும், 95,017 இரண்டாவது மருந்தளவுகளும் அடங்கும்,” என்று அவர் இன்று தனது கீச்சகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநிலங்களில், 303,050 பேர் இரண்டு மருந்தளவுகளைப் பெற்று, முதலிடத்தில் சிலாங்கூர் உள்ளது, அதைத் தொடர்ந்து சரவாக் (250,011), ஜொகூர் (244,400), பேராக் (209,174) மற்றும் கோலாலம்பூர் (198,655) ஆகியவை உள்ளன.

  • பெர்னாமா