ரவுப் ஆஸ்திரேலியத் தங்க சுரங்கம் (ஆர்.எ.ஜி.எம்.) தொடர்ந்த அவதூறு வழக்கை அனுமதித்த முந்தைய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மலேசியாகினி செய்த மேல்முறையீட்டை ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி, வெர்னான் ஓங் லாம் கியாட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்ந்திருந்த குழுவில், இந்த முடிவு 3-2 எனப் பிரிக்கப்பட்டது.
மலேசியாகினியின் முறையீட்டை நிராகரிப்பதற்கான பெரும்பான்மை முடிவை, அமர்வில் இருந்த நீதிபதி அப்துல் இரஹ்மான் செப்லி வாசித்தார். பெரும்பான்மை முடிவை ஆதரித்த மற்ற நீதிபதிகள் ஸலேஹா யூசோஃப் மற்றும் ஹஸ்னா முகமது ஹாஷிம் ஆவர்.
மலேசியாகினியின் முறையீட்டிற்கு ஆதரவு தெரிவித்த சிறுபான்மை முடிவை நீதிபதி ஹர்மிந்தர் சிங் தலிவால் வாசித்தார், நீதிபதி வெர்னானும் சிறுபான்மை முடிவின் ஒரு பகுதியாக இருந்தார்.
வழக்குரைஞர் சைரஸ் தாஸ் மலேசியாகினியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், சிசில் ஆபிரகாம் ஆர்.எ.ஜி.எம்.-ஐ பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2016-ஆம் ஆண்டில், மலேசியாகினி ஒரு பொறுப்பான தகவல் ஊடகம் என்றும், தனது செய்தி அறிக்கைகளை வெற்றிகரமாகத் தற்காத்து வருவதாகவும் கூறி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மலேசியாகினிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
புகாரளித்தல் என்பது அவதூறு வழக்கு உரிமைகோரல்களுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு வாதமாக மாறும், வழக்கமாக ஊடக நிறுவனங்கள் அறிக்கையிடல் பக்கச் சார்பற்றதாகவும் பொது நலனுக்காகவும் இருக்கும் வரை, பொது நபர்களைப் பற்றி நிரூபிக்கப்படாதக் குற்றச்சாட்டுகளை மீண்டும் வெளியிடுவதை உள்ளடக்கியது.
மலேசியாகினி மோசமான நம்பிக்கையுடன் செயல்படவில்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2018-ஆம் ஆண்டில், மேல்முறையீட்டு நீதிமன்றம், இந்தத் தீர்ப்பை இரத்து செய்தது, உயர்நீதிமன்றம் “குற்றச்சாட்டு மற்றும் சமநிலையற்ற மற்றும் நியாயமற்றது” என்ற அறிக்கையைப் பாதுகாப்பதில் சட்டத்தில் தவறு செய்ததாகக் கூறியது.
மேல்முறையீட்டு நீதிமன்றம், மலேசியாகினிக்கு RM200,000 இழப்பீடு மற்றும் RM150,000 செலவுகளைச் செலுத்த உத்தரவிட்டது. இன்று, ஃபெடரல் நீதிமன்றம் RM200,000 கூடுதல் செலவுகளை விதித்தது.
கோவிட் -19 காரணமாக, மோசமடைந்துள்ள பொருளாதார நிலைமையினால், மலேசியாகினி பொது மக்களின் பங்களிப்புகளை இம்முறை கேட்காது. அச்செய்தி நிறுவனம் அதன் சட்டப் பாதுகாப்பு நிதியைப் பயன்படுத்தும்.
இந்த முடிவானது, பொது நலனில் அக்கறைகொண்ட பத்திரிகைக்குப் பெரும் அடியாகும் என்று மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் இன்று தெரிவித்தார்.
“இந்த முடிவு எங்களுக்கு வருத்தமளிக்கிறது. புக்கிட் கோமானில் வசிப்பவர்களின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து அறிக்கையிடுவதில், பத்திரிகையாளர்களாகிய நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்கிறோம்.
“கிராமவாசிகளுக்கு எதிராக, தங்கச் சுரங்க நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு சம்பந்தப்பட்ட முந்தையத் தீர்ப்பில், தங்கச் சுரங்கம் தொடர்பில் தங்கள் கவலையை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறி, அதே நீதிமன்றம் கிராமவாசிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.
“இருப்பினும், எங்கள் விஷயத்தில், அவர்கள் கூறியதைச் செய்தியாக்கியதற்காக, நாங்கள் அவதூறு பரப்பியதாக எங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.