தடுப்பூசி மையத்திற்கு (பிபிவி) வருமாறு முந்தைய நாள் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்க, மறுநாள் பிபிவி சென்ற ஒரு வயதான பெண்மணி, தடுப்பூசியின் முதல் மருந்தளவு ஊசி பெறுபவர்களின் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தெரிந்ததும் குழப்பமும் வருத்தமும் அடைந்தார்.
68 வயதான அவர், ஜூலை 2-ஆம் தேதி, குறிப்பிட்ட பிபிவி-க்குச் செல்ல ஆயத்தமானபோதுதான் இந்த விஷயம் தெரியவந்தது என்றார்.
மைசெஜாத்தெராவில் அப்பெண்ணின் நியமனம் குறித்த விவரங்களின்படி, பேராக், மஞ்சோங்கில் உள்ள லுமுட் கீரி, அரசு ஊழியர்கள் வீட்டுவசதி பல்நோக்கு மண்டபத்தில் உள்ளக் சுகாதார வசதி இடம் காட்டப்பட்டது.
இருப்பினும், தடுப்பூசி இடம் தைப்பிங்கில் உள்ள, அட்டெக் பொது மண்டபம் (உயர் தொழில்நுட்பப் பயிற்சி மையம்) கமுனிங் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவைப் பொறுத்தவரை, இரு இடங்களும் சுமார் 83 கி.மீ. தூரம் கொண்டவை, ஓர் இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்குச் செல்ல 1 மணிநேரம் 30 நிமிடங்கள் எடுக்கும்.
அம்மூத்தக் குடிமகளின் கூற்றுப்படி, மைசெஜாத்தெராவில் குறிப்பிடப்பட்ட பிபிவி அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளது, எனவே அது ஒரு பிரச்சனையல்ல, ஆனால் சுகாதார வசதி இடம் அங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது.
எனவே, பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் எனும் கவலையில் தனது அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்த அந்த அரசு ஊழியர், அது குறித்து தெளிவுபெற அவரது மருமகன் கொடுத்த ஒரு தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.
தினமும் நிலையைச் சரிபார்க்கவும்
அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, ஒரு பெண் தன்னிடம், தவறு நடந்திருப்பதாகவும், மேலும் குறிப்பிட்ட இடத்தைப் பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
“மைசெஜாத்தெரா பயன்பாட்டில் உள்ள தகவல்களை அவர்கள் புதுப்பிப்பார்கள் என்றும் அவர் கூறினார்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும் மற்றொரு உறவினர் கூறப்பட்ட பிபிவிக்கும் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளார்.
“நான் அங்குச் சென்று எனது மைசெஜாத்தெராவைக் (சந்திப்பு) காட்டினேன்.
“அங்கிருந்த தாதி ஒருவர், எனது அடையாள அட்டையைப் பெற்று சரி பார்த்தபோது, என் பெயர் (கணினியில்) காணவில்லை என்று சொன்னார். பின்னர் நான் அவரிடம் என் தொலைபேசியைக் காட்டினேன்.
“அவர் : இது தவறு … இது பிழை ஏற்பட்டுள்ளது,” என்று கூறினார்.
அவரைப் போலவே, அதே தொழில் புரிந்த பலருக்கு, அந்நாளில் இதுபோன்று நடந்ததாகவும் சம்பந்தப்பட்ட தாதி தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.
அவரது பெயர் கணினியில் இல்லை என்பது தெரிய வந்த பிறகு, அடுத்த புதிய சந்திப்பு எப்போது என்று பிபிவி முகப்பில் கேட்டதற்கு, மைசெஜாத்தெரா தகவலைப் புதுப்பிக்கும் என்று மட்டுமே கூறப்பட்டதாக அவர் சொன்னார்.