தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம், நாடாளுமன்றத்தை மீண்டும் திறப்பதாக இன்று அறிவித்ததை அடுத்து, அஹ்மத் ஜாஹிட் ஹமிடி இப்போது அடுத்த நடவடிக்கைகளுக்குத் திட்டமிட தொடங்கிவிட்டார்.
பதிவைப் பொறுத்தவரை, பி.என்-க்கு அம்னோ வழங்கிய 14 நாள் காலம் நேற்று முடிவடைந்தது.
இன்று மாலை, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உட்பட பல அம்னோ தலைவர்களை அஹ்மத் ஜாஹித் கோலாலம்பூரில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
உத்துசான் மலேசியாவின் அறிக்கையின்படி, கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களுடன் அம்னோ தலைவரின் சந்திப்பு, புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடந்தது.
இருப்பினும், கூட்டம் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
குறிப்பிட்ட காலத்திற்குள், பி.என் நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்கத் தொடங்க வேண்டும் என்று அம்னோ கோரி இருந்தது.
ஜூலை 26 தொடக்கம் 5 நாட்களுக்கு மக்களவை கூட்டமும், ஆகஸ்ட் 3 முதல் 5 வரையில் மேலவை அமர்வும் நடக்கும் என்று பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்தது.
கட்சியின் எம்.பி.க்கள் அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்பது அம்னோவின் கோரிக்கை, இதனால் பி.என். அதிகாரத்திலிருந்து நீக்கப்படும்.
கட்சி எடுக்கும் முடிவை ஆதரிப்பதற்காக, அஹ்மத் ஜாஹித் பெரும்பாலான அம்னோ உச்சமன்ற உறுப்பினர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழிகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
உத்துசான் மலேசியாவின் அறிக்கையின்படி, இன்று பிற்பகல் சந்திப்பைத் தவிர, அஹ்மத் ஜாஹித் இன்று இரவு அம்னோ எம்.பி.க்களுடன் ஒரு சந்திப்பையும் நடத்துவார்.