கோவிட் 19 | நாட்டில் நிலவிவரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், கோவிட் -19 தொற்றுநோய் நிலை தொடர்ந்து கவலை அளிக்கிறது.
இன்று நண்பகல் வரை, 8,868 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மே 29-க்குப் பிறகு பதிவான இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். மேலும் இது, மொத்த கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை இப்போது 808,658 -க்குக் கொண்டு வந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 135 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 5,903-ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இன்று, 5,802 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 445 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் – 4,152 (272,993), கோலாலம்பூர் – 1,133 (85,042), ஜொகூர் – 336 (73,722), சபா – 279 (71,468), சரவாக் – 281 (67,841), நெகிரி செம்பிலான் – 897 (50,314), பினாங்கு – 237 (36,054), கிளந்தான் – 135 (35,751), பேராக் – 543 (28,517), கெடா – 360 (27,421), மலாக்கா – 183 (20,540), பஹாங் – 152 (15,387), திரெங்கானு – 68 (11,589), லாபுவான் – 64 (8,922), புத்ராஜெயா – 47 (2,495), பெர்லிஸ் – 1 (602)
மேலும் இன்று, 29 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 19 பணியிடத் திரளைகள் ஆகும்.