கோவிட் 19 | இன்று நண்பகல் வரையில் நாட்டில், 9,180 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது மொத்த தொற்றுநோயை, 817,838 -க்குக் கொண்டு வந்துள்ளது என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மேலும் இது, இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையிலான தினசரி தொற்றுநோயாகும். முந்தையப் பதிவு மே 29-ல், தினசரி நேர்வுகள் 9,020 -ஆக பதிவாகியது.
மேலும், இன்று 77 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,980 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில் இன்று, 5,713 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 959 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 465 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் – 4,400 (277,393), கோலாலம்பூர் – 1,271 (86,313), ஜொகூர் – 315 (74,037), சபா – 323 (71,791), சரவாக் – 406 (68,247), நெகிரி செம்பிலான் – 899 (51,213), பினாங்கு – 142 (36,196), கிளந்தான் – 151 (35,902), பேராக் – 241 (28,758), கெடா – 417 (27,838), மலாக்கா – 222 (20,762), பஹாங் – 214 (15,601), திரெங்கானு – 82 (11,671), லாபுவான் – 80 (9,002), புத்ராஜெயா – 16 (2,511), பெர்லிஸ் – 1 (603).
மேலும் இன்று, 30 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, நாட்டில் அறிவிக்கப்பட்ட 3,029 திரளைகளில் 865 இன்னும் செயலில் உள்ளன.