‘கொலைகார அரசாங்கம்’ பொம்மை : மலாக்கா மேம்பாலச் சாலையில் கிடந்தது

‘கொலைகார அரசாங்கம்’ என்ற சொற்களைக் கொண்ட மனிதப் பொம்மை ஒன்று, இன்று காலை, மலாக்கா மேம்பாலச் சாலையில் கண்டெடுக்கப்பட்டது.

அந்தப் பொம்மையை, ஜாலான் துன் அப்துல் ரசாக் – ஆயேர் கெரோ மேம்பாலச் சாலையில் பொதுமக்கள் கண்டுபிடித்தனர் – அரசாங்க நிர்வாகக் கட்டடமான ஶ்ரீ நெகிரி-க்கு அருகில் காணப்பட்டதாக ஓரியண்டல் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பொம்மை, வெளிர் நீல நிறக் காற்சட்டை மற்றும் வெள்ளை நிறச் சட்டையுடன், வைக்கோல் தொப்பி அணிந்திருந்தது. ‘கொலைகார அரசாங்கம்’ என்றச் சொல் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருந்தது.

இன்று காலை, அந்தப் பொம்மையைப் போலீசார் அகற்றியதாகக் கூறப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு, மலேசியாகினி மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் அஃப்சானிசர் அகமதுவைத் தொடர்பு கொண்டுள்ளது.

கடந்த மே மாதம், சுங்கை மலாக்காவைச் சுற்றியுள்ள பகுதியில், “தோல்வியுற்ற அரசாங்கம்” என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள், அரசாங்கத்திற்கு எதிரான செயல்முறையின் அடையாளமாகத் தொங்கவிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.