வயதானவர்கள் சம்பந்தப்பட்ட புதியத் தொற்றுகளில் குறிப்பிடத்தக்க இறக்கம்

நேற்று வரையிலான சுங்கை பூலோ மருத்துவமனையின் சமீபத்திய தகவல்கள், 23-வது தொற்றுநோயியல் வாரம் (எம்.இ.) தொடங்கி, முதியவர்களிடையே கடுமையான தொற்றுநோய்களின் எண்ணிக்கையில் (பிரிவுகள் 4 மற்றும் 5) கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) இரண்டாம் கட்டத்தின் தொடக்கத்திற்கு ஏற்ப, கீழ்நோக்கியப் போக்கு காணப்படுகிறது, இது கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கம், 22-வது எம்.இ.-யிலிருந்து, செயல்திறனின் ஆரம்ப அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது.

அதன் ஊடக அறிக்கையில் இணைக்கப்பட்ட வரைபடத்தின் அடிப்படையில், எடுத்துக்காட்டாக, 21-வது எம்.இ.-இல், 60 முதல் 79 வயதுடைய நோயாளிகள் பிரிவில் கோவிட் -19 நேர்மறை நேர்வுகளுக்காக 217 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; 23-வது எம்.இ.-இல், 125 நோயாளிகளாக எண்ணிக்கை குறைந்து, அண்மைய 28-வது எம்.இ.-இல் 119 நோயாளிகளாகப் பதிவாகியுள்ளது.

வகை 4 என்பது, நிமோனியா நோயாளிகள் ஆவர், அவர்களுக்கு உயிர்வளி உதவி தேவைப்படுகிறது; அதேசமயம் 5-ஆம் வகை நோயாளிகளுக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

 

இதற்கிடையில், டாக்டர் நூர் ஹிஷாம், ஜூலை 17, 2021 முதல், இதுவரை தடுப்பூசி நியமனம் பெறாத மூத்தக் குடிமக்கள் (60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்), கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள, எந்தத் தடுப்பூசி மையத்திற்கும் (பிபிவி) நேரடியாகச் சென்று, ஒரே நாளில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

“இது தவிர, பொது விடுமுறை நாட்கள் உட்பட, ஒவ்வொரு வார இறுதியிலும் பிபிவி தொடர்ந்து இயங்கும். இந்த நடவடிக்கைகள் சுகாதார அமைச்சின் அர்ப்பணிப்புக்கு ஏற்ப, உடனடி விகிதத்தில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக அமைந்துள்ளன,” என்று அவர் கோவிட் -19 வளர்ச்சி குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

ஆகையால், வழங்கப்பட்ட சந்திப்பு உறுதி தேதியில், குறிப்பிட்ட பிபிவிக்குச் செல்லுமாறும், பிபிவியில் தடுப்பூசி செயல்முறையின் போது எஸ்ஓபி-க்களை எப்போதும் பராமரிக்குமாறும் மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

  • பெர்னாமா