“பாதுகாப்பற்றது” எனக் கருதப்படும் 175 அரசாங்க வலைத்தளங்களில், சைபர் பாதுகாப்பு தணிக்கை நடத்தப்படும், இது தனிப்பட்ட தரவுகள் மற்றும் பிற இணையப் பாதுகாப்பு ஆபத்துகளுக்குள் ஊடுருவி பாதிக்கக்கூடியது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்.சி.எம்.சி.) தலைவர் ஃபத்லுல்லா சுஹைமி அப்துல் மாலேக், மே மாத இறுதிக்கும் ஜூலை தொடக்கத்திற்கும் இடையிலான மலேசியாகினியின் கண்டுபிடிப்புகள் குறித்து கேட்டபோது இதைக் கூறினார்.
“இந்த 175 வலைத்தளங்களைப் பொறுத்தவரை, ‘ஓட்டை’களை விசாரிக்க சைபர் பாதுகாப்பு தணிக்கைகளை நடத்த மலேசிய சைபர் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பணியாற்ற, மலேசிய நிர்வாக நவீனமயமாக்கல் மற்றும் மேலாண்மை திட்டமிடல் பிரிவுக்கு (மம்பு) நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.
“குறைபாடுகள் இருந்தால், மேம்பாடுகளைச் செய்ய முடியும். இது நடந்துகொண்டிருக்கும் செயல்,” என்று அவர் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை, 700 அரசாங்க வலைத்தளங்களில், குறைந்தது 175 பாதுகாப்பற்றவை என வகைப்படுத்தப்பட்டதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
“Https”-க்குப் பதிலாக URL “http” உடன் தோன்றும் வலைத்தளங்கள் “பாதுகாப்பற்றது” என்று அழைக்கப்படுகின்றன.
HTTP வலைத்தளம் இஸ்தானா நெகாரா, பாதுகாப்பு அமைச்சு மற்றும் கோவிட் -19 மலேசியக் கண்காணிப்பு தளத்தை உள்ளடக்கியது.
இதற்கிடையில், மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைஃபுட்டின் அப்துல்லா, இணையப் பாதுகாப்பைக் கடுமையாக்குவதற்குக் கூட்டு முயற்சிகளை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.
“நான் இந்த விஷயத்தை வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டு வந்தேன், ஆனால் மலேசியாகினி அறிக்கையின் அடிப்படையில் இல்லை. மலேசியாவில் இணையப் பாதுகாப்பின் நிலை குறித்த ஒட்டுமொத்த அறிக்கையை நான் கொண்டு வந்தேன், இதனை அமைச்சரவையில் புகாரளிப்பது இயல்பானது.
“தேசியப் பாதுகாப்பு மன்றத்தைச் செயலகமாகக் கொண்டு, முறையான ஓர் இணையப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
“இணையப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்திற்குத் துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமை தாங்குவார்,” என்று அவர் கூறினார்.