சிறப்பு நாடாளுமன்றக் குழு முன்னிலையில் நூர் ஹிஷாம் விளக்கமளித்தார்

அவசரகால உத்தரவு அமல்படுத்தப்பட்டதற்குப் பின், நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக் குழுவின் முதல் கூட்டம், சுகாதாரம், அறிவியல் மற்றும் புத்தாக்கத் தேர்வுக் குழுவின் விவாதங்களுடன் இன்று தொடங்கியது.

கோவிட் -19 தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தை (பிக்) இயக்கும் அறிவியல் மற்றும் புத்தாக அமைச்சின் (மோஸ்டி) மூத்த அதிகாரி மற்றும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோரின் கருத்துக்களைக் கேட்க இந்தக் குழகின்று ஒருநாள் கூட திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசியாகினியிடம் பேசிய பண்டார் கூச்சிங் எம்.பி. டாக்டர் கெல்வின் யீ லீ வுயன், இந்தக் குழு நூர் ஹிஷாமிடமிருந்து ஒரு விளக்கத்தைச் செவிமடுத்தப் பின்னர், அதிகாரிகளின் சில முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பும் என்றார்.

பிக்-இன் வளர்ச்சி குறித்தும் மோஸ்டி அதிகாரிகளிடம் கேட்கப்படும் என்றார்.

“நல்ல செயல்களுக்கு நாங்கள் பாராட்டு தெரிவிப்போம். இது சமூக நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.

“கவனிக்க வேண்டிய இடைவெளிகள் இருந்தால், நாங்கள் பரிந்துரைகளையும் செய்வோம்,” என்று யீ கூறினார்.

குழுவின் பணி, அரசாங்கத்தை மேற்பார்வையிட்டு பொறுப்புக்கூற வேண்டும் என்பதாகும்.

இந்தக் குழு, குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் உத்திகள் பற்றிய விளக்கத்தையும் கோரும்.

மற்றவற்றுடன், ‘பிக்’ நடவடிக்கைகள் முடிந்ததும், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குழு அதிகாரிகளிடம் கேட்கும் என்று யீ தெரிவித்தார்.

கூட்டம் நேரடியாக நாடாளுமன்றத்தில் நடைபெறும்.

நிரந்தர உத்தரவில் திருத்தம் செய்யப்படாமல், விவாதத்தை இயங்கலையிலோ அல்லது வேறு இடத்திலோ நடத்த முடியாது என்றும் யீ கூறினார்.