ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்தத்தை நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது

கட்டாயச் சேவையை முடித்த பின்னர், சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்த காலத்தையும் நீட்டிக்க அரசாங்கம் இன்று ஒப்புக்கொண்டது.

முன்னர் எழுந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, ஒரு விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியத் திட்டத்தை வகுக்குமாறு சுகாதார அமைச்சுக்கும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

“இது உடனடி நடவடிக்கை, நடுத்தரக் குறுகியக் காலத் திட்டங்கள் மற்றும் நீண்டகால திட்டங்களை இது உள்ளடக்கியது.

“உடனடி தீர்வாக, ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகள், பல் அதிகாரிகள் மற்றும் மருந்தாளுநர்கள், இரண்டு வருடக் காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை ஒப்புக் கொண்டது. சேவையின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும் நிபுணத்துவ ஆய்வுகளுக்கான தயாரிப்புகளை உறுதி செய்வதற்கும்.

“முதல் இரண்டு ஆண்டு ஒப்பந்த காலத்தில், நிபுணத்துவப் படிப்பைத் தொடர ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ மற்றும் பல் அலுவலர்கள் மீதான ஒப்பந்த அடிப்படையில் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகளுக்கு இந்த நியமனத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.