ஜூலை 26-ல், ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால் திட்டமிட்டபடி நடக்கும்

அரசாங்கத்திற்கு எதிரான ஹர்த்தால், நாளை மறுநாள் திட்டமிடப்பட்டபடி தொடரும் என்பதை ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால் இயக்கம் உறுதிப்படுத்தியது.

இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஒப்பந்தத்தை நீட்டிக்க அரசாங்கம் அளித்த சலுகை – நேற்று பிரதமர் அறிவித்தபடி – ஒரு தீர்வு அல்ல என்று அவர்கள் கூறினர்.

“எங்கள் வாயை மூடுவதற்காக இந்த மிட்டாய், அரசாங்கத்தின் இயக்க முறைமை எங்களுக்குத் தெரியும், நாங்கள் ஏமாற மாட்டோம்,” என்று அவர்கள் இன்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தனர்.

இரண்டு வருடக் கால கட்டாயச் சேவையை முடித்தவுடன், சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்த காலத்தை – ஒப்பந்த அடிப்படையில் – நீட்டிக்க ஓர் ஒப்பந்தத்தை நேற்று அரசாங்கம் அறிவித்தது.

பிரதமர் முஹைதீன் யாசின் கூற்றுப்படி, இந்த உடனடி தீர்வு அவர்களின் சேவையைத் தொடரவும், சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவும் உதவும்.

இருப்பினும், அக்குழுவின் கூற்றுப்படி, நேற்று அரசாங்கம் வழங்கிய அத்தீர்வைப் ‘புத்திசாலிகள்’ யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

“இந்தத் துறையில் இல்லாததால் அவர்களுக்கு எங்கள் பிரச்சனை புரியவில்லை, அரசாங்கத்தின் இந்த அரைவேற்காடு தீர்வு எங்களுக்குத் தேவையில்லை, இதுபற்றி முழுமையாய் சிந்திக்கவோ, கவலைப்படவோ அவர்களுக்கு நேரம் இல்லை, ஏனெனில் இது அவர்களின் பிரச்சினை அல்ல .

“எங்கள் வாழ்க்கைக்குத் தேவையான தெளிவான திட்டமிடலையும், தெளிவான தீர்வுகளையும் வழங்குங்கள்.

“இப்போது அதிகமானவர்களை இழக்க நாம் தயாராக இருக்கிறோமா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.