ஷா ஆலாம்மில் உள்ள செத்தியா மாநாட்டு தடுப்பூசி மையத்தில் கோவிட் -19 தொற்றுநோய் பரவியுள்ளது. இதனை ஒட்டி கோட் ப்ளூவின் அடிப்படையில் போலீசார் தொற்றின் காரணத்தை ஆராய விசாரனை நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
கோவிட் -19 வழக்குபடி அதிகாரிகள் சரியான முறையில் செயல்படத் தவறிவிட்டதாக ஆதாரங்கள் கூறியுள்ளது.
போலீசார் நேற்று ஷா ஆலம் மாவட்ட காவல் தலைமையகதில் கோட் ப்ளூவின் தலமை அதிகாரியான பூ சு லின் – அவர்களை விசாரித்தனர்.
அவர் பொதுமக்களுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய செய்திகளைப் பரப்புவதால் தண்டனைச் சட்டமான பிரிவு 505இல் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று ஒரு அறிக்கை இணைய முகப்பில் உள்ளது.
அதுமட்டும்மல்லாது இணையத்தை தவறான முறையில் பயன்படுத்தியதால் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டமான பிரிவு 233இல் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தடுப்பூசி மையம் கோட் ப்ளூவின்மேல் புகார் கொடுத்தது இணைய முகப்பிற்கு அறிந்த ஒன்றாகும்.
“பூ காவல்துறையுடன் ஒத்துழைத்தார், ஆனால் அவரது அறிக்கையின் ஆதாரத்தை பகிர மறுத்துவிட்டார்,” என்று அவர் கூறினார்.
அந்த அறிக்கை பொது நலனுக்காக எழுதப்பட்டது என்று அந்த இணைய முகப்பு தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் கோட் ப்ளூ இணைய முகப்பின் தலைமை பதிப்பாசிரியரை துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் உள்ளனர். தடுப்பூசி மையங்களில் உள்ள தன்னார்வலர்களால் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தில் நாட்டிற்கு சேவை செய்து தங்களின் நேரத்தையும் தங்களின் உயிரையும் தியாகம் செய்கின்றனர். இந்த இணைய முகப்பு தன்னார்வலர்களின் பாதுகாப்பை கருதில்கொண்டுதான் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறது.
அரசாங்கம் இதுபோன்ற கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு அங்கிகாரம் வழங்கிய இணைய முகப்புகளை துன்புறுத்தவும் அச்சுறுத்தவும் கூடாது.
“அதற்கு பதிலாக, இதை படிப்பினையாக எடுத்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.