கேஜே : பள்ளி திறப்பதற்கு முன், ஆசிரியர்களுக்கு குறைந்தது ஒரு மருந்தளவு தடுப்பூசி

மக்களவை | செப்டம்பர் 1-ஆம் தேதி, திட்டமிடப்பட்ட நேருக்கு நேர் பள்ளி அமர்வு கட்டங்கட்டமாகத் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து கல்வியாளர்களும் ஆதரவுக் குழுக்களும் கோவிட் -19 தடுப்பூசி ஊசியைக் குறைந்தது ஒரு மருந்தளவு பெறுவார்கள்.

கோவிட் -19 நோய்த்தடுப்பு சிறப்புப் பணிக்குழுவும் (சி.ஐ.டி.எஃப்.) கல்வி அமைச்சும், தடுப்பூசி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை அடையாளம் கண்டுவருவதாகவும், அவர்கள் குறைந்தது முதல் மருந்தளவைப் பெற தடுப்பூசி நியமனங்களைத் திட்டமிடுவதாகவும் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் (பிக்) கைரி ஜமாலுடின் தெரிவித்தா.

நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் 303,682 அல்லது 73.5 விழுக்காடு ஆசிரியர்கள் ஒரு மருந்தளவு தடுப்பூசி பெற்றுள்ளனர்.

“அமலாக்கக் குழுவின் மொத்த உறுப்பினர்கள் 45,197 (67 விழுக்காடு) மற்றும் 33,633 ஒப்பந்த ஆதரவு சேவை ஊழியர்கள் (38 விழுக்காடு) (அரசுப் பள்ளிகள்) குறைந்தது ஒரு மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், தனியார் பள்ளிகளுக்கு 12,894 ஆசிரியர்கள் (66.4 விழுக்காடு) குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு தடுப்பூசி பெற்றுள்ளனர்.

“பள்ளி துவங்குவதற்கு முன்பு, அனைத்து கல்வி ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று நானும் கல்வி அமைச்சரும் உறுதியளிக்கிறோம்,” என்று நேற்று, மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளின் போது அவர் கூறினார்.

டாக்டர் மஸ்லீ மாலிக் (சுயேட்சை-சிம்பாங் ரெங்கம்) கல்வித் துறை ஊழியர்களுக்கான தடுப்பூசி பிரச்சினையை எழுப்பினார், மேலும் பொது மற்றும் தனியார் உயர்க்கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

ஃபைசரின் முதல் மற்றும் இரண்டாவது மருந்தளவுகளுக்கு இடையிலான இடைவெளியை நீட்டிக்கும் திட்டத்தில், கைரி ஆரம்பத்தில் அரசாங்கம் ஒப்புக் கொண்டதாகக் கூறினார், ஆனால் டெல்டா கோவிட் -19 மாறுபாட்டின் தொற்று காரணமாக மூன்று வார இடைவெளி காலம் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்றார்.

“டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக ஒரு மருந்தளவு ஃபைசரின் செயல்திறன் 30 விழுக்காடு மட்டுமே என்பதை நாங்கள் கண்டறிந்தோம், அதனால்தான் அந்த நேர இடைவெளியை நாங்கள் பராமரிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா