ஐஜிபி : கவலைப்பட வேண்டாம், தேசியப் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் உள்ளது

நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொது ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக அரச மலேசியக் காவற்படை (பிடிஆர்எம்) உறுதி அளித்துள்ளது.

காவற்படைத் தலைவர், அக்ரில் சானி அப்துல்லா சானி, சமூகத்தின் நல்வாழ்வை உறுதி செய்ய (பிடிஆர்எம்) தனது கண்காணிப்பை அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

“கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான கூட்டு முயற்சியாகப், பொதுமக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் தேசியப் பாதுகாப்பு மன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து செந்தர இயங்குதல் நடைமுறைகளையும் எப்போதும் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

-பெர்னாமா