“நான் அரசியலமைப்பைப் பாதுகாக்கிறேன், ஆனால் மன்னருக்கு எதிராக செயல்படுவதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது”

மாமன்னருக்கு எதிராகச் செயல்படுவதாக தன் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டுகளைப் பிரதமர் முஹைதீன் யாசின் கடுமையாகச் சாடினார்.

அவரின் செயல்பாடுகள், வெறுமனே அரசியலமைப்பின் மேன்மையைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பு முடியாட்சி சட்டப் பெருமையைப் பாதுகாப்பதற்கு மட்டுமே என்று அந்தப் பாகோ எம்.பி. சொன்னார்.

“எனது கொள்கைகளை நான் தியாகம் செய்ய மாட்டேன், எனது பொறுப்பை நேர்மையாக நான் நிறைவேற்றுவேன், மாமன்னருக்கும் நாட்டிற்கும் விசுவாசமாக இருப்பேன், அரசியலமைப்பைப் பாதுகாப்பேன்.

முன்னதாக ஜூலை 21-ஆம் தேதி, அவசரகாலச் சட்டம் இரத்து செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறியதை அடுத்து, நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், அகோங்கின் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்த, அரண்மனை ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டது.

அரண்மனையின் கூற்றுபடி, மன்னர் அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்ய ஒப்புதல் வழங்கவில்லை, மாறாக அதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று மன்னர் விரும்பினார்.

ஆனால், பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ), அவர்களின் நடவடிக்கைகள் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 40 (1) இன் படி முறையாகவும், சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு ஏற்பவும் இருப்பதாகக் கூறி தற்காத்ததோடு, அகோங் அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் வாதிட்டது.

இதன் விளைவாக, முஹைதீனின் செயல் அகோங்கிற்கு விசுவாசமற்றதாக இருப்பதாகவும், கூட்டாட்சி அரசியலமைப்பைப் பாதுகாப்பதை மீறியதாகவும் பலர் விமர்சித்தனர்.

எனவே, பிரதமரும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.