அசலினா சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அசலினா ஓத்மான் சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது  புத்ராஜெயா,  நாடாளுமன்றத்தை முடக்கியதால் அசலினா வருத்தம் அடைந்தாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தை  இடைநிறுத்தம்  செய்ததால் நாட்டின் ஜனநாயகம் வீழ்ச்சி கண்டுள்ளது  என்றும் அவர் தெரிவித்தார்.

ஜொகூர், பெங்ஙெராங்  நாடாளுமன்ற உறுப்பினரான அசலினா ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு துணைச் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

அவசரக்கால கட்டளையை அமல்படுத்தும் பொழுது நாடாளுமன்றத்தை மூடுவதை உரக்கக் கண்டித்த தலைவர்களில் அசலினாவும் ஒருவர்.

பிரதமர் மாமன்னர் சம்மதம்  இல்லாமல் அவசர கட்டளையை ரத்து செய்ததால் நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமன்னர் அந்த அவசரக்கால கட்டளையைப்பற்றி  நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கலைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அதன்படி நடைபெறவேண்டிய சிறப்பு நாடாளுமன்ற சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. இச்செயலைக்கண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது ஒரு சூழ்ச்சி என விவரித்தனர்.

வரும் செப்டம்பரில் நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்படும். ஆகவே அவசரக் கால சட்டம் குறித்து நாடாளுமன்றம் திறந்தவுடன் விவாதிக்கலாம் என்று அரசாங்கம் கூறியது.