பி.என்., முஹைதீனுடன் பாஸ் தொடர்ந்து நிலைத்திருக்கும்

நாட்டின் அரசியல் நிலைமை கேள்விக்குறியால் நிறைந்திருந்தாலும், பாஸ் அமைதி காத்து, பிரதமர் முஹைதீன் யாசினின் பின்னால் உறுதியாக நிற்கிறது.

பாஸ் துணைத் தலைவர், துவான் இப்ராஹிம் துவான் மான், அரசாங்கத்தில் நடந்து வரும் அரசியல் நெருக்கடியின் சமீபத்திய முன்னேற்றங்களில் கட்சி தீவிரமாக உள்ளது என்றார்.

இருப்பினும், இந்த அரசியல் நெருக்கடியில், பாஸ்-இன் நிலைப்பாடு குறித்த எந்தவொரு அறிக்கையும் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹாசனால் மட்டுமே வெளியிடப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“தற்போது, ​​தேசியக் கூட்டணி அரசுக்கும் முஹைதீன் யாசினின் தலைமைக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதோடு; அரசாங்கத்தின் தேசிய மீட்பு திட்டத்தின் (பிபிஎன்) மூலம் கோவிட் -19 தொற்றுநோயைச் சமாளிபதிலும் கட்சி கவனம் செலுத்துகிறது.

“இந்தக் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் பாஸ் தொடர்ந்து உறுதியாக இருக்கும்.

“எனவே, அனைத்து மலேசியர்களும் பொறுமையாக இருப்பார்கள் என்றும், கோவிட் -19 தொற்றைச் சமாளிக்க ஒத்துழைப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் கூறினார்.