இஸ்மாயில் சப்ரி : செப்டம்பர் வரையில் 31 பிஎன் எம்.பி.க்களும் அரசாங்கத்தை ஆதரிப்பர்

இந்தச் செப்டம்பரில் நாடாளுமன்றம் கூடும் வரையில், தேசிய முன்னணியின் எம்.பி.க்கள், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை ஆதரிப்பர் என்று துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

“எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரின் கட்டளையை மதிக்கிறோம், தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தைத் தொடரவும் நாடாளுமன்றத்தில் அதன் சட்டபூர்வத்தன்மையைத் தீர்மானிக்கவும் மன்னர் அனுமதித்துள்ளார், எனவே நாங்கள் அதற்குக் கட்டுப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்தத் தகவல் சற்று முன்னர் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

இஸ்மாயில் அந்தப் பட்டியலை வாசித்தார், அம்னோ தலைவர் ஜாஹித் ஹமிடி சார்ந்த முகாமின் பட்டியலிலும் (முஹிடினுக்கு எதிர்ப்பு) இஸ்மாயிலின் பட்டியலிலும் (முஹிடினுக்கு ஆதரவு) மூன்று பெயர்கள் ஒரே மாதிரியாக காணப்பட்டன.

அந்த மூன்று எம்.பி.க்கள் :-

  1. முகமட் நிஸார் ஸகாரியா (பாரிட்)
  2. நோ ஒமார் (தஞ்சோங் காராங்)
  3. அஸீஸ் அப்துல் ரஹீம் (பாலிங்)

இன்று பிற்பகல் கோலாலம்பூரில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் இதோ :-

  1. இஸ்மாயில் சப்ரி யாகோப் (பெரா)
  2. மஸ்துரா யாசிட் (கோல கங்சார்)
  3. மஹ்ட்சீர் காலிட் (பாடாங் தெரப்)
  4. முகமட் ஷஹார் அப்துல்லா (பாயா பெசார்)
  5. ஹலிமா சாட்டிக் (கோத்த திங்கி)
  6. ஜலாலுட்டின் ஆலியாஸ் (ஜெலெபு)
  7. நஸ்ரி அப்துல் அஸிஸ் (பாடாங் ரெங்காஸ்)
  8. முகமது சலீம் ஷாரீபஃப் (ஜெம்புல்)
  9. அன்னுார் மூசா (கெதெரே)
  10. இஸ்மாயில் முகமது சைட் (கோலா கிராவ்)
  11. ஹசான் ஆரிஃபின் (ரொம்பின்)
  12. அப்துல் இரஹ்மான் முகமது (லிப்பிஸ்)
  13. தாஜுட்டின் அப்துல் ரஹ்மான் (பாசிர் சாலாக்)
  14. இட்ரிஸ் ஜுசோ (பெசுட்)
  15. ஷாஹிடான் காசிம் (ஆராவ்)
  16. இஸ்மாயில் அப்துல் முத்தாலிப் (மாரான்)
  17. வீ கா சியோங் (ம.சீ.ச – ஆயேர் ஹீத்தாம்)
  18. எம் சரவணன் (ம.இ.கா. – தாப்பா)

கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, ஆனால் தேசியக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறவர்கள் :-

  1. கைரி ஜமாலுட்டின் (ரெம்பாவ்)
  2. ரீஸால் மெரிக்கான் நைனா மெரிக்கான் (கப்பளா பத்தாஸ்)
  3. டாக்டர் ஆடாம் பாபா (தெங்காரா)
  4. ஆர்தர் ஜோசப் குருப் (பிபிஆர்எஸ் – பென்சியாங்கான்)
  5. ஹிஷாமுடின் ஹுசைன் (செம்புரோங்)
  6. முகமது அலாமின் (கிமானிஸ்)
  7. ஜாஹிடி ஜைனுல் (பாடாங் பெசார்)
  8. தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் (புத்ராஜெயா)
  9. வீ ஜெக் செங் (மசீச – தஞ்சோங் பீயாய்)
  10. அஹ்மத் ஹம்சா (ஜாசின்)