முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற அம்னோ எம்.பி.க்களின் கடிதம் – அம்னோ வெளிப்படுத்தியது

சபா துணை முதல்வர் போங் மொக்தார் ராடின் மற்றும் கிமானிஸ் எம்.பி., மொஹமடின் அலமின் உள்ளிட்ட, முஹைதீன் யாசினைப் பிரதமராக ஆதரிக்காத 13 எம்.பி.க்களின் கடிதங்களை அம்னோ வெளிப்படுத்தியது

அக்கடிதம் யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு அனுப்பப்பட்டது.

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரையில் தேதியிடப்பட்ட இந்தக் கடிதங்களை வழக்கறிஞர் சாந்ரா சேகரன் உறுதிபடுத்தினார்.

அந்தக் கடிதங்கள் கட்சியின் சமூக ஊடகத்தில் சுருக்கமாக வெளியிடப்பட்டன.

கடிதத்தில் கையெழுத்திட்ட அம்னோ எம்.பி.க்கள் :-

நஜிப் அப்துல் ரசாக் (பெக்கான்)

அஸலினா ஓத்மான் சைட் (பெங்கேராங்)

அஹ்மத் ஜாஹிதட் ஹமிடி (பாகான் டத்தோ)

அஹ்மத் நஸ்லான் இட்ரிஸ் (ஜெரண்டுட்)

அஹ்மத் ஜஸ்லான் யாகூப் (மாச்சாங்)

தெங்கு ரசாலேக் ஹம்சா (குவா மூசாங்)

ரம்லி முகமது நோர் (கேமரன் மலை)

அஹ்மத் மஸ்லான் (பொந்தியான்)

முகமட் நிஸார் ஜகாரியா (பாரிட்)

நோ ஒமார் (தஞ்சோங் காராங்)

அஸீஸ் அப்துல் ரஹீம் (பாலிங்)

ஷம்சுல் அனுவார் நசாரா (லெங்கோங்)

போங் மொக்தார் ராடின் (கினாபாத்தாங்கான்)

முகமது அலமின் (கிமானிஸ்)

போங் மொக்தாரும் முகமட்டும் முஹிதீனுக்கான ஆதரவை மீட்டுக்கொண்ட ஆக அண்மைய இரு அம்னோ எம்.பி.க்கள் ஆவர்.

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கையெழுத்திட்ட இரண்டு கடிதங்களையும் அம்னோ பதிவேற்றியுள்ளது.

அம்னோ எம்.பி.க்கள் கையொப்பமிட்டதாகக் கூறப்படும், ஜூலை 30-ம் தேதியிட்ட முதல் கடிதத்தை ஜாஹிட் அகோங்கிடம் வழங்கினார்.

ஆகஸ்ட் 4 தேதியிட்ட இரண்டாவது கடிதத்தில், ஜாஹிட் முஹைதீனுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்ற 14 எம்.பி.க்களின் முழுமையானப் பட்டியலைச் சமர்ப்பித்தார்.

இந்தக் கடிதங்கள் வெளிவருவது, இன்னும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறும் முஹைதீனின் கூற்று குறித்து மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.