முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கான நன்மைகள் : எஸ்.ஓ.பி. வழிகாட்டி

முழுமையாக தடுப்பூசி பெற்ற நபர்களுக்கான, விரிவான செந்தர இயங்குதல் நடைமுறைகளைத் (எஸ்.ஓ.பி.) தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.)  வெளியிட்டுள்ளது.

தடுப்பூசியின் முழு அளவைப் பெற்றவர்களுக்குப் பிரதமர் முஹைதீன் யாசின் சில சலுகைகளை அறிவித்த பிறகு இந்த எஸ்.ஓ.பி.க்கள் வெளியிடப்பட்டன.

வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்களை வீட்டிலேயேத் தனிமைப்படுத்துதலும், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு மாநில, மாவட்ட எல்லைகளைக் கடந்து பயணிப்பதும், மசூதிகள் மற்றும் வழிபாட்டு தளங்களில் பிரார்த்தனை செய்வதும் இது அடங்கும்.

பின்வருபவை விரிவான எஸ்.ஓ.பி.க்கள் : (தேசிய மீட்புத் திட்டத்தின் [பிபிஎன்] கட்டத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து மாநிலங்களிலும் இது செயல்படும்).

மாநில எல்லை கடந்த பயணம்

  • இதற்கு மட்டுமே பொருந்தும் : தொலைதூரத் தம்பதிகள் சந்திக்க விரும்பினால்; பெற்றோர்கள் 18 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளைப் பார்க்க விரும்பினால்
  • கட்டாயமாக் காவல்துறை அனுமதி பெற வேண்டும்.
  • காவல்துறையிடம் விண்ணப்பிக்கும் போது, பின்வரும் ஆவணங்களின் நகல்களை இணைக்க வேண்டும்:

திருமணமான தம்பதிகள் :

  1. மைகாட்
  2. திருமணச் சான்றிதழ் / அட்டை நகல்
  3. கோவிட் -19 தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழின் நகல்
  4. முகவரி / முதலாளியின் கடித ஆதாரம்

பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு (18 வயதுக்குட்பட்டவர்கள்) :

  1. மைகாட் (பெற்றோர்)
  2. பிறப்புச் சான்றிதழ் (குழந்தை)
  3. கோவிட் -19 தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழின் நகல்
  4. பள்ளி ஆவணங்கள் (தேவைப்பட்டால்)

சாலைத் தடுப்புகளில் காண்பிக்க, காவல்துறை மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி கடிதத்தை வழங்கும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்படுதல்

  • மலேசியாவில், வசிப்பிடம் கொண்ட வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு (குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள்) மட்டுமே.
  • புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், கோவிட் -19 தொற்றுக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை எதிர்மறையாக இருக்க வேண்டும்.
  • நாட்டில் நுழையும் போது அறிகுறிகள் இருக்கக்கூடாது
  • முழுமையான தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.
  • தனிமைப்படுத்தலுக்கு ஏற்ற வீடு இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்படும் காலம் 14 நாட்கள் ஆகும், ஆனால் ஆபத்து மதிப்பீட்டின் அடிப்படையில் 21 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம்.

இருப்பினும், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருபவர்களுக்கு, தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்களாக நிர்ணயிக்கப்படும்.

முழுமையான தடுப்பூசி பெறாதவர்கள், தற்போதுள்ள எஸ்.ஓ.பி.க்களின் படி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி வாசல், வழிபாட்டு தளங்கள்

முழு அளவிலான தடுப்பூசி பெற்றவர்கள் மசூதியில் அல்லது முஸ்லீம் அல்லாதவர் அவரவர் வழிபாட்டு தளங்களில் பிரார்த்தனை செய்யலாம், மாநில மத இலாகாவின் அதிகாரம் அல்லது ஒற்றுமை அமைச்சின் விதிகளைப் பொறுத்து.

கூடுதல் நன்மைகள்

பிபிஎன் -இன், 2-ஆம் கட்டத்திலும், அதற்கு மேலும் உள்ள மாநிலங்களுக்கு, முழுமையாகத் தடுப்பூசி பெற்றவர்களுக்குக் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன.

அம்மாநிலங்களின் பட்டியல் : பேராக், கிளந்தான், திரெங்கானு, பஹாங், பினாங்கு, சபா, சரவாக், பெர்லிஸ் மற்றும் லாபுவான்.

இருப்பினும், இந்த நெகிழ்வுத்தன்மை பின்வரும் மாநிலங்களுக்குப் பொருந்தாது : சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், கெடா, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜாயா.

மாவட்ட எல்லை கடந்த பயணம்

மாவட்ட எல்லைகளைக் கடக்க, முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்கள் சாலைத் தடுப்பில் பின்வரும் ஆவணங்களை வழங்க வேண்டும்.

  1. மைகாட்
  2. கோவிட் -19 தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ்

உணவகத்தில் சாப்பிடுவது

அனைத்து உணவகங்களும், முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் வளாகத்தில் உணவருந்த அனுமதிக்கலாம் :

  1. முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே, வளாகத்தில் சாப்பிட அனுமதி என்று அறிவிப்பு ஒன்றை அவர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
  2. முழுமையாகத் தடுப்பூசி பெற்ற தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அவர்கள் காட்ட வேண்டும்.
  3. மேசைகளுக்கு இடையிலான இடைவெளி மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
  4. 50 விழுக்காடு (வாடிக்கையாளர்) திறனில் செயல்பட வேண்டும்.

இது உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சால் நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் விதிமுறைகளுக்கு உட்பட்டது.

முழுமையான தடுப்பூசி பெற்ற தம்பதியினர், தங்கள் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உடன் அழைத்து வரலாம்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி திட்டம் இல்லை.

உள்நாட்டு சுற்றுலா

அதே நிலையில், தங்கும் விடுதிகளுக்கும் தங்கும் வீடுகளுக்கும் (homestay) மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விருந்தினர்கள், தங்கள் கோவிட் -19 டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழை தங்கும் விடுதிகளில் பதியும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

முழுமையாகத் தடுப்பூசி பெற்ற தம்பதியினர் தங்கள் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உடன் அழைத்து வரலாம்.

வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள்

தனிநபர் நடவடிக்கைகளுக்கு மட்டுமே, குழு நடவடிக்கைகள் அல்லது தொடுதல் நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மட்டுமே.

‘முழு அளவிலான தடுப்பூசி’ என்பதற்கான வரையறை

ஃபைசர், அஸ்ட்ராஸெனேகா மற்றும் சினோவாக் : இரண்டாவது மருந்தளவைப் பெற்று 14 நாட்களுக்கு மேல்.

ஜான்சன் & ஜான்சன் மற்றும் கேன்சினோ : முதல் மருந்தளவைப் பெற்று 28 நாட்களுக்கு மேல்.