தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்), 12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளையர்களுக்குத் தடுப்பூசி போடும் செயல்முறையைத் தொடங்கும் என்று அதன் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.
முன்னுரிமைக்கு ஏற்ப, பிக் தடுப்பூசியைத் தொடங்கும் என்று அவர் கூறினார். அதாவது, நாள்பட்ட நோய்களுடைய இளையர்கள் (12 முதல் 17 வயது வரை), அதைத் தொடர்ந்து மருத்துவப் பிரச்சினைகள் இல்லாத தனிப்பட்ட இளையர்கள் (12 முதல் 17 வயது வரை) வயது அடிப்படையில் போடப்படும்.
கோயிட் -19 தடுப்பூசி வழங்கல் (ஜே.கே.ஜே.ஏ.வி.) சிறப்பு குழுவுக்கு, சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் பரிந்துரையின் படி இந்த முறை செயல்படுத்தப்பட்டதாகக் கைரி கூறினார்.
“@DGHisham சுற்றறிக்கை மற்றும் சமீபத்திய மருத்துவ வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, இளையர்களுக்கானக் கோவிட் -19 தடுப்பூசி எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் @JKJAV மூலம் வெளியிடப்படும்,” என்று கைரி தனது கீச்சக செய்தியில் தெரிவித்துள்ளார்.
- பெர்னாமா