ராம்கர்பால் : சனுசியைக் காவல்துறை விசாரிக்குமா?

புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், கொள்கலன்களில் கோவிட் -19 உடல்கள் நகைச்சுவையால் சர்ச்சையைக் கிளப்பிய கெடா மந்திரி பெசார் (எம்பி) முஹம்மது சனுசி நோரைப் காவல்துறை விசாரிக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக ஊடகங்களில், சனுசியை அவமதித்ததாகக் கூறி நாடு முழுவதும் பலரைப் போலீசார் விசாரித்ததைத் தொடர்ந்து இக்கேள்வி எழுந்துள்ளது.

“இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மற்றவர்களிடம் காவல்துறை விரைவாக விசாரணை நடத்துகிறது, ஆனால் எம்பிக்கு எதிராக அல்ல, ஆனால் அவரது அறிக்கையால்தான் அவர்கள் தூண்டப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று ராம்கர்பால் நேற்று இரவு ஓர் அறிக்கையில் கூறினார்.

டிஏபி தேசியச் சட்டப் பணியகத்தின் தலைவரான ராம்கர்பால், சனுசி தனது அறிக்கை வெறும் நகைச்சுவைதான் என்று சில பத்திரிகையாளர்களிடம் கூறினாலும், ஒரு செய்தியாளர் சந்திப்பில் தான் இருப்பதை மந்திரி பெசார் அறிந்திருக்க வேண்டும், அவர் தெரிவிக்கும் விஷயங்கள் ஊடகங்களில் தெரிவிக்கப்படும் என்பதையும் அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

சனுசியின் விமர்சகர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, “அமைதியை மீறுவதற்கான நோக்கத்துடன், வேண்டுமென்றே செய்யப்பட்டது” என்ற குற்றத்தின் மீது, எம்பியின் அறிக்கை தண்டனைச் சட்டம் பிரிவு 504-இன் கீழ் இருக்கலாம் என்று ராம்கர்பால் கூறினார்.

மேற்கூறியவற்றின் அடிப்படையில், கெடா எம்பி பிரிவு 504 -ன் கீழ், ஒரு குற்றத்தைச் செய்திருக்க வாய்ப்புள்ளது, மேலும் அவரை விசாரணைக்கு அழைப்பதன் மூலம் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியும்.

“சிரம்பானைச் சேர்ந்த மூத்தக் குடிமகனின் வழக்கைப் போல, காவல்துறையினர், அவரைக் காலையில், அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, விசாரணைக்காகத் தடுத்து வைக்க, அருகில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உத்தரவு பெறுவார்களா?

“அவர் (சனுசி) சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல, உடனடியாக அவரை விசாரிக்க காவல்துறை பயமோ, தயவோ இல்லாமல் செயல்பட வேண்டும்,” என்று ராம்கர்பால் கூறினார்.