‘யாரும் பெரும்பான்மையை நிரூபிக்காததால், நான் இராஜினாமா செய்யவில்லை’

புதியப் பிரதமராக இருப்பதற்குப் போதுமான பெரும்பான்மையை யாரும் நிரூபிக்க முடியாததால், தான் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்று முஹைதீன் யாசின் கூறினார்.

“மக்களவையின் வேறு எந்த உறுப்பினருக்கும் பெரும்பான்மை ஆதரவு இல்லாத சூழ்நிலையில், புதியப் பிரதமரை அரசியலமைப்பின் படி நியமிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்.

“பிரதமரை நியமிக்க முடியாதபோது, ​​அமைச்சரவையை நியமிக்க முடியாது, புதிய அரசாங்கத்தை உருவாக்க முடியாது,” என்று முஹைதீன் கூறினார்.