மறு அறிவித்தல் வரும் வரை, அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் அப்பணிபடை உறுப்பினர்களுக்கான விடுப்பை முடக்கி வைக்க புக்கிட் அமான் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புக்கிட் அமான் மேலாண்மைத் துறை இயக்குநர், ஸைனி ஜாஸ், நேற்று ‘ஓப் அமான்’ நடவடிக்கை தொடங்கப்பட்டதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, மேலும் இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றார்.
ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரணிக்குக் காவல்துறை தயாராக வேண்டியிருப்பதால், விடுமுறைகள் நிறுத்தப்பட்டதாக விஷயம் தெரிந்த வட்டாரங்கள் கூறின.
இருப்பினும், இன்று ஸைனியைத் தொடர்பு கொண்டபோது, எந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான அறிவுறுத்தல்களும் வரவில்லை என்றார்.
“இது ஒரு பொதுவான நடைமுறை, பிடிஆர்எம் அவ்வப்போது செய்வதுதான்,” என்று அவர், குறுஞ்செய்தி மூலம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“பேரணிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை,” என்று மேலும் விசாரித்தபோது அவர் விளக்கினார்.
பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதையும் ஸைனி மறுத்தார்.