21,468 புதிய நேர்வுகள், 277 மரணங்கள்

இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, 21,468 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 277 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று சம்பவித்த 277 கோவிட்-19 இறப்புகள், நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 11,968- ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 17,025 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,075 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 537 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் – 7,449, கோலாலம்பூர்- 2,183, கெடா – 1,807, ஜொகூர் – 1,485, சபா – 1,654, பினாங்கு – 1,316, கிளந்தான் – 1,088, நெகிரி செம்பிலான் – 974, பேராக் – 940, மலாக்கா – 723, சரவாக் – 715, பகாங் – 572, திரெங்கானு – 440, லாபுவான் – 6, புத்ராஜெயா – 66, பெர்லிஸ் – 50.

மேலும் இன்று, 41 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன; ஆக செயலில் உள்ள மொத்த திரளைகளின் எண்ணிக்கை தற்போது 1,293 ஆக உள்ளது.