சபாநாயகர் பதவியை அஸார் இராஜினாமா செய்ய வேண்டும் – அமானா

மக்களவை சபாநாயகர் பதவியைக் காலி செய்யுமாறு கோரி, அஸார் ஹருனுக்கு அமானா நேற்று ஒரு பிரேரணையை அனுப்பினார்.

அமானா தலைவர் முகமட் சாபு, ஜூலை 26 முதல் 29-க்கு இடையில் நடந்த மக்களவையின் சிறப்பு அமர்வின் போது, அஸாரின் நடவடிக்கையின் அடிப்படையில் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது என்றார்.

“மக்களவை சபாநாயகர் அஸார் அஸீசான் @ ஹருன் தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற விதிகளின் கட்டளை 4 (1)-இன் கீழ் நாங்கள் ஒரு பிரேரணையை அனுப்பியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

பின்வரும் அடிப்படையில், இந்த முன்மொழிவு செய்யப்பட்டது என்று கோத்த ராஜா எம்.பி.யுமான அவர் விளக்கினார் :

  • கடந்த சிறப்பு அமர்வின் போது, அஸாரின் நடவடிக்கைகள் கூட்டாட்சி அரசியலமைப்பின் 150 (3) மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பின் 62-வது பிரிவுகளுடன் முரண்பட்டன.
  • நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு முடியாட்சியின் அடிப்படைக் கொள்கைகளின் பின்னணியில், அஸாரின் நடவடிக்கைகள் அரசியலமைப்பு முடியாட்சியின் செயல்பாட்டை புறக்கணிப்பதாகவும் மறுக்கப்படுவதாகவும் கருதப்படுகின்றன.

பதிவுக்காக, அஸார் ஒரு மூத்த வழக்கறிஞர் ஆவார், தேசிய முன்னணி ஆட்சி காலத்தில், அவர் அரசாங்கத்தின் பல்வேறு விமர்சனங்களை எப்போதும் கொண்டு வந்தார்.

2018-ல், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கமாக ஆணை பெற்ற பிறகு, தேர்தல் ஆணையத்தின் தலைவராக அஸார் நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து, பி.எச். ஒரு தேர்தலை சந்திக்காமலேயே கவிழ்க்கப்பட்டது, அதன் பிறகுத் தேசிய கூட்டணி அரசாங்கம் அஸஹாரை மக்களவை சபாநாயகராக நியமித்தது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் மூத்த நீதிபதி முகமட் ஆரிஃப் யூசோஃப்பிற்குப் பதிலாக, சர்ச்சைக்குரிய செயல்பாட்டில் அஸார் நியமிக்கப்பட்டார்.

முன்னதாக, தீவிரமற்றதாகக் கருதப்பட்டதோடு, கோவிட் -19 அச்சுறுத்தல் இருப்பதன் அடிப்படையில் முன்னதாகவே முடிவடைந்த சிறப்பு நாடாளுமன்ற அமர்வையும்  எதிர்க்கட்சிகள் எதிர்த்தனர்.

அஸாருக்குப் பதிலாக, முகமட் ஆரிப்பைச் சபாநாயகராக மீண்டும் நியமிக்க அமானா முன்மொழிந்துள்ளதாகவும் மொஹமட் கூறினார்.