சிலாங்கூர் தேசிய முன்னணியின் (பிஎன்) தகவல் பிரிவு தலைவர், இஷாம் ஜலீல், இதற்கு முன்பு அம்னோ தலைமையால் செய்யப்பட்ட, ‘No Anwar, No DAP’ (அன்வர் இல்லை, டிஏபி இல்லை) என்ற கொள்கை என்னவானது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று பல சலுகைகளை வழங்கிய பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மற்றும் டிஏபியுடன் இணைந்து பணியாற்ற, தேசியக் கூட்டணிக்கு ஆதரவான அம்னோ தலைமை தயாரானதைத் தொடர்ந்து இஷாம் அக்கேள்வியை எழுப்பினார்.
“எனவே, உண்மையில் யார் பிகேஆர் மற்றும் டிஏபி-உடன், ஒரு புதிய வழியை உருவாக்க விரும்புகிறார்கள்?
“இதற்கு முன், அவர்கள் என்ன பேசினார்கள்? “அன்வர் இல்லை, டிஏபி இல்லை” என்று அவர்கள் சொல்வார்கள்.
“இப்போது அவர்கள் எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள், அவர்களின் பதவி பாதுகாப்பாக இருப்பதை உறுதியளித்தால் போதும்,” என்று அவர் ஒரு முகநூல் அறிக்கையில் கூறினார்.
அந்த அறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை இஷாம் பகிர்ந்து கொண்டார், ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிடான் காசிமை மேற்கோள் காட்டி, பிகேஆர் மற்றும் டிஏபியுடன் அம்னோ ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினால் அது “கேவலமானது” என்று அதில் ஷாஹிடான் கூறியிருந்தார்.
ஷாஹிடன், பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவளிக்கும் அம்னோ தலைவர்களின் ஒரு பகுதியாக மாறினார், மேலும் அவர் அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற முயற்சித்த அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியை எதிர்த்தார்.
முஹைதீன் – தற்போது நாடாளுமன்றத்தில் அவருக்கான ஆதரவு மீதான சந்தேகம் காரணமாக பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார் -அதனால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பல சலுகைகளை அவர் கோடிட்டுக் காட்டினார்.
நேற்று பிற்பகல், தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு செய்தியில் நேரடியாகப் பேசிய முஹைதீன், பிரதமரின் பதவிக் காலத்தை இரண்டு தவணைகளுக்கு மட்டும் எனக் கட்டுப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தம் செய்வதாக உறுதியளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, ஒரு மூத்த அமைச்சருக்கு இணையான ஊதியத்தைப் பெறுவதற்கான ஒரு முன்மொழிவையும் அவர் வழங்கினார், அத்துடன் கட்சி தாவலுக்கு எதிரான சட்டத்தை இயற்றுவதாகவும் உறுதியளித்தார்.