20,670 புதிய நேர்வுகள், கே.எல். மற்றும் ஏழு மாநிலங்களில் 4 இலக்கங்களில் பதிவு

இன்று நண்பகல் நிலவரப்படி, 20,670 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூர், பினாங்கு, கிளந்தான், பேராக், கெடா, சபா, ஜொகூர் மற்றும் கோலாலம்பூரில் 1,000-க்கும் மேற்பட்ட கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன.

மேலும், இன்று 260 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 7,718- ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 17,655 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 540 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

லாபுவானில் இன்று புதியத் தொற்று எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (6,606), கோலாலம்பூர் (2,028), கெடா (1,796), சபா (1,752), ஜொகூர் (1,425), கிளந்தான் (1,370), பினாங்கு (1,251), பேராக் (1,003), பகாங் (794), நெகிரி செம்பிலான் (727), சரவாக் (725), திரெங்கானு (560), மலாக்கா (521), பெர்லிஸ் (61), புத்ராஜெயா (51).

நாட்டில் பதிவான 4,154 மொத்த திரளைகளில், 1,308 இன்னும் செயலில் உள்ளன. இதில் இன்று அறிவிக்கப்பட்ட 34 புதிய திரளைகளும் அடங்கும்.