20,546 புதிய நேர்வுகள், பஹாங்கில் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 24 மணி நேர நேரத்தில், 20,546 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், 20 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் ஏற்பட்ட தொடர்ச்சியான ஐந்தாவது நாள் இதுவாகும்.

சிலாங்கூர், சபா, கெடா, ஜொகூர், கோலாலம்பூர், பினாங்கு, பேராக் மற்றும் கிளந்தான் ஆகிய எட்டு மாநிலங்களும் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசமும், 4 இலக்கங்களில் புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.

பஹாங் மற்றும் சரவாக் ஆகியவையும் நான்கு இலக்கங்களை நோக்கிச் செல்கின்றன.

மேலும், இன்று 282 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 12,510- ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 16,945 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,059 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 526 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (7,307), சபா (1,665), கெடா (1,596), ஜொகூர் (1,508), கோலாலம்பூர் (1,442), பினாங்கு (1,111), பேராக் (1,069), கிளந்தான் (1,025), சரவாக் (963), பஹாங் (926), நெகிரி செம்பிலான் (698), மலாக்கா (631), திரெங்கானு (534), புத்ராஜெயா (47), பெர்லிஸ் (21), லாபுவான் (3).