ஏன் அன்வார் மலேசியாவுக்குப் பிரதமராக வேண்டும்?

லிம் கிட் சியாங் | மலேசியாவிற்குப் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராகிம் புதியப் பிரதமராகத் தேவைபடுகிறார், கோவிட் -19 தொற்றால் ஏற்படும் பேரழிவைத் தடுக்கக்கூடியப் புதியப் படைகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டு வரவும் மலேசியக் கனவின் உணர்வைத் தூண்டவும் அவர் தேவை.

நம் நாடு 12,500-க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 நேர்வுகளைக் காணும் வரையில், தொற்றுநோயை நிர்வகிக்கத் தவறிய அரசாங்கத்தின் பொது முகமாக இருந்த அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகூப் நம் நாட்டுக்குத் தேவையில்லை.

புதியத் தலைமை மற்றும் கொள்கைகள் இல்லாவிட்டால், ஆகஸ்ட் 31 அன்று 64-வது தேசியத் தினத்தைக் கொண்டாடும் வேளையில், மலேசியா தொடர்ந்து 15,000 இறப்புகள் மற்றும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 நேர்வுகளை நோக்கி செல்லும்.

கோவிட் -19 தொற்றுநோய் மேலாண்மை, பொருளாதார மறுமலர்ச்சி அல்லது தேசிய-மாநில மேம்பாட்டு கொள்கைகளை நிர்வகிப்பதில் கொள்கையளவில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், நாடு தோல்வியை நோக்கி பயணிக்கிறது என்று அரசியல் பார்வையாளர்களால் கூறப்பட்டது.

இஸ்மாயில் சப்ரி பிரதமராக வந்தால், அரசியல் ஊழல்களால் ஆன கொள்கைகளையே மீண்டும் தொடருவார், இது மலேசியாவைத் தோல்வியடைந்த நாடாக மாற்றும்.

மலேசியாவுக்குப் புதிய பிரதமரும் புதிய தலைமையும் தேவை, அங்கு அனைத்து குடிமக்களும், இனம், மதம் அல்லது அரசியல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், மலேசியக் கனவை எதிர்பார்க்கலாம், அங்கு நம் நாடு உலகத்தரம் வாய்ந்த நாடாக மாறும், மேலும் மலேசியத் தந்தையின் ஆசைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாட்டை “இருண்ட மற்றும் தொந்தரவு நிறைந்த உலகில், ஒளியின் கதிராக” மாற்றுவதற்கு.

1970 முதல், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 90 மடங்கு வளர்ந்துள்ளது, இருப்பினும் இந்தோனேசியா, வியட்நாம், சீனா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கான இந்த எண்ணிக்கை முறையே 117, 122, 163, 175 மற்றும் 178 மடங்கு அதிகரித்துள்ளது.

50 வருடங்களுக்குப் பிறகு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம்  அதிக ஜிடிபியுடன் மலேசியாவை முந்தியுள்ளன.

அடுத்த 50 ஆண்டுகளில், நாம் மற்ற நாடுகளை விஞ்சிவிடுவோமா அல்லது நம்மை விட அதிகமான நாடுகள் நமக்கு முன்னே இருக்குமா?

2070 ஆம் ஆண்டுக்கான மலேசியாவுக்குத் திட்டமிடக்கூடிய ஒரு பிரதமரும் தலைவரும் எங்களுக்கு வேண்டும், நாடாளுமன்றத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடர்வது பற்றி கவலைப்படும் அல்லது கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தும் பிரதமர் அல்ல.

அனைத்து மலேசியர்களின் எதிர்காலத்திற்கான ஒரு பிரதமர் – இன்றும் எதிர்காலத்திற்கும்!


லிம் கிட் சியாங், இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்றத்தின், டிஏபி உறுப்பினர்