22,262 புதிய நேர்வுகள், 223 மரணங்கள்

கோவிட் -19 | இன்று 22,262 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகி, ஒட்டுமொத்த நோய்த்தொற்றுகளை 1,535,286 ஆகக் கொண்டு வந்துள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்தது.

மேலும், இன்று 223 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 13,936- ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 18,576 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,035 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 513 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (7,011), சபா (2,651), சரவாக் (1,964), கெடா (1,880), ஜொகூர் (1,558), பினாங்கு (1,459), கோலாலம்பூர் (1,220), கிளந்தான் (1,039), பேராக் (946), மலாக்கா (882), பஹாங் (664), திரெங்கானு (495), நெகிரி செம்பிலான் (405), புத்ராஜெயா (41), பெர்லிஸ் (38), லாபுவான் (9).

மேலும் இன்று, 32 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன.