அம்னோ மீண்டும் ஆட்சிக்கு வந்தது : புவா எதிர்க்கட்சியைக் குற்றம் சாட்டினார்

அம்னோ துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நாட்டின் ஒன்பதாவது பிரதமராக நியமிக்கப்பட்டார் என்ற செய்தி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் டிஏபி தேசியப் பரப்புரை செயலாளர் டோனி புவா, அம்னோ மீண்டும் ஆட்சிக்கு வந்ததைக் கண்டு அவர் எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டினார்.

“பிப்ரவரி 2020-இல், அரசாங்கத்திலிருந்து தூக்கி எறியப்பட்டது மிகவும் மோசமானது.

“ஆனால், அம்னோ மீண்டும் ஆட்சிக்கு வர அனுமதித்தது, அது ஓர் அடி,” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

கடந்த ஆண்டு பக்காத்தான் ஹரப்பானின் வீழ்ச்சிக்கும் எட்டாவது பிரதமர் முஹைதீன் யாசின் இராஜினாமா செய்வதற்கு வழிவகுக்கும் அளவிற்கு, தேசியக் கூட்டணி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்ததில் எதிர்க்கட்சிகளும் பங்கு வகித்துள்ளன என புவா சொன்னார்.

அந்த டாமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர், இதற்கு முன்னர் முஹைதீனை வீழ்த்தும் யோசனையைக் கடுமையாகச் சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது; இதற்கு காரணம் அம்னோ மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் அஞ்சினார்.

பதிவுக்காக, அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி, பல வருடங்களுக்குப் பிறகு மே 2018-இல், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிந்தது.

அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயல்பட முஹைதீன் முன்வந்தார், அவரது நிலையைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக அது கருதப்பட்டபோது, அதனைச் சீர்தூக்கி பார்க்க வேண்டுமென விரும்பிய ​​பல எதிர்க்கட்சி தலைவர்களில் புவாவும் ஒருவர்.

பிரதமரின் பதவிக்காலம், ‘வாக்கு 18’ உட்பட, பிஎச் தலைமையிலான அரசியல் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த முஹைதீன் முன்வந்தார்.

அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் சமமான நாடாளுமன்ற ஒதுக்கீடுகளை வழங்கவும், அவர்களின் ஆதரவுக்கு பிரதிபலனாக, எதிர்க்கட்சித் தலைவரை மூத்த அமைச்சருக்கு ஈடான ஒரு பதவியில் நியமிக்கவும் முஹைதீன் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், முஹைதீன் கொடுத்த வாய்ப்புகளை ஏற்கும் புவாவின் முன்மொழிவு நல்ல வரவேற்பைப் பெறவில்லை, மாராக தோல்வியடைந்தது. இதேபோன்ற கருத்தை, மற்றொரு டிஏபி தலைவரான செர்டாங் எம்பி ஓங் கியான் மிங் பகிர்ந்து கொண்டார், அதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இதற்கிடையில், கோத்த கினபாலு டிஏபி எம்பி சான் ஃபூங் ஹின், இஸ்மாயில் சப்ரியின் புதிய அரசாங்கம் இதேபோன்ற வாய்ப்பை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குமா என்று கேள்வி எழுப்பி, மலேசியாகினிக்கு ஓர் அறிக்கையை அனுப்பினார்.

இஸ்மாயில் சப்ரியின் நியமனம் குறித்து, மற்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

முகமட் சாபு (அமானா தலைவர், கோத்த ராஜா நாடாளுமன்ற உறுப்பினர்)

இஸ்மாயில் சப்ரி யாகூப் பிரதமராக நியமிக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன்.

“இருப்பினும், மே 2018 தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்றவர்கள் மீண்டும் ஆணையைப் பெற முடியாமல் போனதில் நான் வருத்தப்படுகிறேன், அது என் மனதில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்தல் செயல்முறை வீணாகிவிட்டதாக மக்கள் உணரலாம். எனவே, மலேசியாவில் ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ செயல்முறை மீண்டும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

“ஷெரட்டன் 2020 நகர்வு சம்பவம்” எதிர்காலத்தில் மீண்டும் நடக்காது என்று மக்களுக்கு நம்பிக்கை கொடுங்கள். அது மீண்டும் நடந்தால், நாம் தேர்ந்தெடுத்த அமைப்பு முறை அழிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம், அடுத்த தேர்தலுக்குள் அது மேம்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தம்.

“வெற்றி பெற்றவர்கள் எதிர்க்கட்சியாகவும், தோல்வியுற்றவர்கள் அரசாங்கமாகவும் மாறும்போது மக்களுக்கு நம்பிக்கையைத் தருவது கடினம். மக்கள் தேர்வு செய்ய வேண்டும். முக்கியமான விஷயம் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்க வேண்டும்.”

சைஃபுதீன் நாசுஷன் (பிகேஆர் பொதுச் செயலாளர், கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர்)

“அரண்மனைக்கு வாழ்த்துக்களும் நன்றியும். அகோங் அறிவுறுத்தியபடி, புதியப் பிரதமர் புதிய அரசியலைக் கொண்டுவருவார் என நம்புவோம்.

“பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்குவது மற்றும் கோவிட் தொற்றுநோய் மீது கவனம் செலுத்துவது மிகப்பெரிய சவாலாகும்.

சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான் (மூடா தலைவர், மூவார் எம்.பி.)

இஸ்மாயில் சப்ரி, மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

பிரிவு 40(2)(a) மற்றும் பிரிவு 43(2)(a)-இன் கூட்டாட்சி அரசியலமைப்பின் படி, 9-வது பிரதமரை நியமித்த மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திற்கும் மாமன்னர் சுல்தான் அல்-அப்துல்லா அல்-முஸ்தபா ரியாத்துதீன் பில்லா ஷாவுக்கும் நன்றி.

“எதிர்க்கட்சி எம்.பி.யாக நான் தொடர்ந்து பணியாற்றி, அரசியல் சேவை செய்வேன்.

ஓர் எம்.பி.யாக, எனது உண்மையான கடமையும் பொறுப்பும், கொள்கைகளையும் தொடர்ந்து முன்னெடுப்பதோடு, மக்களின் நலனுக்காக அரசாஙந்த்தின் ஒவ்வொரு முடிவையும் சரிபார்த்து சமநிலைப்படுத்துவேன்.

மிக முக்கியமாக, நான் அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை, நாட்டிற்காக எப்போதும் நிலைநிறுத்துவேன்.

“புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கம் கோவிட் -19 நெருக்கடியை நிவர்த்தி செய்ய மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க கடுமையாக உழைக்க வேண்டும். வாழ்த்துகள்,” என்றார் அவர்.