சுல்தானா அமினா மருத்துவமனையின் 21 ஊழியர்களுக்குக் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது

ஜொகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையின் (எச்.எஸ்.எ.) 21 சுகாதாரப் பணியாளர்கள், நேற்று முதல் ஜாலான் பெர்சியாரன் அபுபாக்கர் சுல்தான் திரளை சம்பந்தப்பட்ட கோவிட்-19 தொற்றுக்கு நேர்மறையாகப் பதிவாகியுள்ளனர்.

எச்.எஸ்.எ. இயக்குநர் டாக்டர் மொஹ்தார் புங்குட் @ அஹ்மட், மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ஒரு பதிவின் மூலம், எச்.எஸ்.எ. அவசர மற்றும் ஆபத்து துறையில் இந்தக் கொத்து கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார்.

“அதைத் தொடர்ந்து, எச்.எஸ்.எ.  நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தது, தொடர்பு கண்டறிதல் உள்ளிட்ட திரையிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,

“கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் வேலை, வீடு மற்றும் சமூகத்தில் நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிதல் மற்றும் தொண்டை ஸ்மியர் ஸ்கிரீனிங் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. கூடுதலாக, நோயாளி மற்றும் தொடர்பு பிரிவுகளுக்கு ஏற்ப சிகிச்சை, கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் தூய்மை படுத்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவசர மற்றும் ஆபத்து துறையின் செயல்பாடு பாதிக்கப்படவில்லை என்றும் வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரிவு அனைத்து ஊழியர்களின் சுகாதார நிலையைக் கண்காணிக்கும், இதில் இறுக்கமான தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடையே தொற்று கட்டுப்பாட்டு பிரிவால் கண்காணிக்கப்படும்.

“செந்தர இயங்குதல் நடைமுறைகளைத் தொடர்ந்து கடைபிடிக்கவும்; கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட போதிலும் அவர்கள் எங்கிருந்தாலும் புதிய விதிமுறைகளைப் பின்பற்றவும் நிர்வாகம் பொதுமக்களை அழைக்கிறது,” என்று அவர் கூறினார்.

நேற்று, சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஜொகூர் பாரு மாவட்டத்தில் ஒரு புதியத் திரளை இருப்பதாக அறிவித்தார், அதாவது ஜாலான் பெர்சியாரன் அபுபாக்கர் சுல்தான் திரளை, இதில் உயர்-ஆபத்து குழுக்கள் உள்ளன.

  • பெர்னாமா