இன்று மதியம் 12 மணி வரையில், நாட்டில் 24,599 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை பதிவாகியுள்ள தினசரி நேர்வுகளில் இதுவே ஆக அதிகமானது.
சபா, பினாங்கு மற்றும் ஜொகூர் ஆகிய மூன்று மாநிலங்கள், இன்று மிக உயர்ந்த எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன.
சபாவில், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக, நேர்வுகள் 3,000-ஐத் தாண்டியுள்ளன. ஜொகூர் முதன்முறையாக 2,000 நேர்வுகளை எட்டியது. பினாங்கு இன்று ஆக உயர்ந்த எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.
மேலும், இன்று 393 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி பதிவான 360 இறப்புகளை இது முறியடித்துள்ளது.
இறந்தவர்களில் 294 நோயாளிகள் மலேசியர்கள் என்றும் 99 பேர் வெளிநாட்டினர் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 15,211- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 22,657 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 487 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் – 6,936 (579,732), சபா – 3,487 (134,517), ஜொகூர் – 2,785 (128,666), பினாங்கு – 2,078 (77,852), சரவாக் – 2,024 (105,072), கெடா – 1,538 (89,027), கிளந்தான் – 1,312 (71,083), பேராக் – 1,170 (62,537), கோலாலம்பூர் – 881 (168,705), பகாங் – 690 (40,519), திரெங்கானு – 567 (30,324), நெகிரி செம்பிலான் – 526 (89,980), மலாக்கா – 515 (46,252), பெர்லிஸ் – 67 (1,589), புத்ராஜெயா – 20 (5,197), லாபுவான் – 3 (9,791).
மேலும் இன்று, 35 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 20 பணியிடத் திரளைகள் ஆகும்.