இஸ்மாயில் புதிய அமைச்சரவையை அறிவித்தார், திபிஎம் இல்லை

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இன்று புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.

இஸ்மாயில் பட்டியலை அறிவிக்கும் போது, ​​இன்று உருவாக்கப்பட்ட அமைச்சரவையின் முக்கியப் பணி கோவிட் -19 தொற்றைச் சமாளிப்பதும் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதும் ஆகும் என்றார்.

பதவியேற்ற முதல் 100 நாட்களுக்குள், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

துணைப் பிரதமர் (திபிஎம்) பதவி, இஸ்மாயிலின் அமைச்சரவையில் உருவாக்கப்படவில்லை.

இருப்பினும், முந்தைய முஹைதீன் யாசின் நிர்வாகத்தின் போது செய்யப்பட்டதைப் போல், இஸ்மாயில் நான்கு “மூத்த அமைச்சர்களின்” பதவிகளை உருவாக்கினார்.

புதிய அமைச்சரவையின் பட்டியல் இங்கே :-

பிரதமர் : இஸ்மாயில் சப்ரி யாகூப்

பிரதமர் துறை அமைச்சர்கள் :-

1. மதம் – செனட்டர் இட்ரிஸ் அகமது

2. சட்டம் – டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர்

3. பொருளாதாரம் – முஸ்தபா முகமது

4. சபா மற்றும் சரவாக் – டாக்டர் மாக்சிமஸ் ஜோனிட்டி ஓங்கிளி

5. சிறப்பு கடமைகள் -அப்துல் லத்தீப் அஹ்மத்

தொழில் மற்றும் சர்வதேச வர்த்தகம் – மூத்த அமைச்சர் : அஸ்மின் அலி

மூத்தப் பாதுகாப்பு அமைச்சர் : ஹிஷாமுடின் ஹுசைன்

மூத்த நிதி அமைச்சர் : செனட்டர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஸீஸ்

மூத்தக் கல்வி அமைச்சர் : செனட்டர் டாக்டர் ராட்ஸி ஜிடின்

உள்துறை அமைச்சர் : ஹம்ஸா ஜைனுடீன்

சுகாதார அமைச்சர் : கைரி ஜமாலுதீன்

போக்குவரத்து அமைச்சர் : வீ கா சியோங்

வெளியுறவு அமைச்சர் : சைஃபுட்டின் அப்துல்லா

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் : அலெக்சாண்டர் நந்தா லிங்கி

மகளிர், குடும்பம் மற்றும் சமூக அமைச்சர் : ரினா ஹருன்

தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் : அன்னுவார் மூசா

பொதுப்பணி அமைச்சர்: ஃபட்ஸிலா யூசோஃப்

விவசாயத் துறை அமைச்சர் : டாக்டர் ரொனால்ட் கியாண்டி

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் : டாக்டர் ஆடாம் பாபா

பெருந்தோட்டம் மற்றும் பொருட்கள் அமைச்சர் : ஸூரைடா கமருடின்

சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் : துவான் இப்ராஹிம் துவான் மான்

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் : ஷாஹிடான் காசிம்

உயர்க்கல்வி துறை அமைச்சர் : நொரைய்னி அகமது

எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் : தக்கியுடின் ஹாசன்

கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்: மஹ்ட்சீர் காலித்

வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் : ரீசல் மெரிக்கான் நைனா மெரிக்கான்

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் : நோ ஒமார்

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் : நான்சி சுக்ரி

தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் : ஹலிமா சாடிக்

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் : அஹ்மத் ஃபைசல் அசுமு

மனிதவளத் அமைச்சர் : எஸ் சரவணன்