இன்று, கோவிட் -19 புதிய தொற்று எண்ணிக்கை 22,597 -ஆக பதிவாகியுள்ளது.
சிலாங்கூர் 5,814 புதிய நேர்வுகளுடன், தொடர்ந்து அதிக தினசரி நேர்வு பங்களிப்பாளராக உள்ளது. சபா, சரவாக் மற்றும் கெடாவில் 2,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில், பினாங்கும் ஜொகூரும் அந்த நிலையை அடைவதற்கு மிக அருகில் உள்ளன.
மிகச்சிறிய மாநிலமான பெர்லிஸ், 98 நேர்வுகளுடன் முந்தைய பதிவுகளை முறியடித்துள்ளது.
கடந்த 14 நாட்களில், தினசரி நேர்வுகளின் பதிவு நான்கு நாட்கள் மட்டுமே 20,000-க்கும் குறைவாக இருந்தன.
மேலும், இன்று 252 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 15,802- ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 19,492 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 451 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (5,814), சபா (2,834), சரவாக் (2,427), கெடா (2,162), பினாங்கு (1,920), ஜொகூர் (1,896), கிளந்தான் (1,289), கோலாலம்பூர் (1,111), பேராக் (1,061), திரெங்கானு (739), பகாங் (579), நெகிரி செம்பிலான் (345), மலாக்கா (269), பெர்லிஸ் (98), புத்ராஜெயா (48), லாபுவான் (5).