இது நாட்டின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு தருணம். துங்கு அப்துல் இரஹ்மான் மேடை ஏறி, “மெர்டேக்கா! மெர்டேக்கா! மெர்டேக்கா!” என்று முழங்கினார் – அது மலாயாவின் விடுதலை அடையாளம்.
பல்வேறு இடர்களையும் தடைகளையும் கடந்து, அறுபத்து நான்கு ஆண்டுகள் சென்றுவிட்டன. நாம் ஒரு விவசாய நாட்டிலிருந்து, ஒரு தொழில்துறை நாடாக மாறி, வளர்ந்த நாடு என்ற நிலையை நோக்கி முன்னேறி வருகிறோம்.
1963-இல், மலேசியா உருவானதை நாம் பார்த்தோம், அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் வெளியேறியது. பின்னர், 1969, மே 13-ல், இன உறவுகளில் சிக்கலை ஏற்படுத்திய, மே 13 கலவரத்தைக் கண்டோம்.
இருப்பினும், பல தசாப்தங்களாக, மலேசியா விரைவானதொரு பொருளாதார வளர்ச்சியைக் கண்டது, அந்தந்தத் துறைகளில் சிறந்ததை உருவாக்கியது.
இனம், மொழி மற்றும் மதங்களின் வளமும் நாட்டின் உருவாக்கத்திற்குப் பங்களித்தன. எளிமையாகச் சொன்னால், அது நம் உணவுகளில் பிரதிபலிக்கிறது – காலை உணவாக ‘நாசி லெமாக்’, மதிய உணவாக ‘குவத்தியாவ் கோரேங்’, இரவு உணவாக மீன் தலை கறி, இப்படியாக பல்வகை உணவுகள்…
64 வயதில், கோவிட் -19 காரணமாக மலேசியா முன்னெப்போதும் இல்லாதச் சுகாதாரச் சவால்களை எதிர்கொள்கிறது. இது இதுவரை 14,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது.
இத்தொற்றுநோய் பொருளாதாரத்தையும் பாதித்தது. தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளுக்கு, எதிர்மறை வளர்ச்சியைக் காண்கிறோம். கடந்த பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் வீழ்ச்சிக்குப் பிறகு, நிலவிய அரசியல் சூழ்நிலையால் இது மேலும் அதிகரித்துள்ளது.
பித்துப் பிடித்த இக்காலக்கட்டத்தில், எங்கள் வேலைகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது – வாசகர்களுக்குத் துல்லியமாகவும் வெளிப்படையாகவும் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
நாடாளுமன்றத்திலிருந்து, கட்சி பொதுக் கூட்டங்கள், அரசியல் தலைவர்களின் நீதிமன்ற வழக்குகள் மற்றும் ஆம், பாலியல் வழக்குகள் உட்பட்.
மிக முக்கியமாக, நாங்கள் கேட்கப்படாத மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களின் நாக்காகச் செயல்படுவோம்.
ஊடகங்கள் மீது பல அழுத்தங்கள் இருந்தபோதிலும், நாங்கள் தொடர்ந்து வெளிப்படைத்தன்மை மற்றும் ஊடகச் சுதந்திரத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம்.
வாருங்கள் அனைவரும், தைரியமாக எங்களுடன் இணைந்து முன்னேறுவோம்.
இம்முறை சுதந்திரத் தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து, மூன்று மாதங்கள், ஒரு வருடம் மற்றும் மூன்று வருடச் சந்தா தொகுப்புகளுக்கு, 20 விழுக்காடு தள்ளுபடி வழங்குகிறோம். நல்ல பத்திரிகை நாட்டின் எதிர்காலத்திற்கான முதுகெலும்பாக விளங்கும்.
நீங்கள் செலுத்தும் சந்தா, சேவை செய்யும் எண்ணம் கொண்ட பத்திரிகைக்கு, செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் மலேசியர்களுக்குக் கொண்டு சேர்க்க உதவும். இது மலாய் மொழித் தளத்தை இலவசமாகத் தொடரவும் உதவும். #கீத்தாஜாகாகீத்தா.
வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும், நண்பர்களுடன் இலவசமாகச் செய்திகளைப் பகிரவும், இலவசச் செய்திமடல்கள் பெறவும், கினி நியூஸ் லேப் மூலம் சிறப்பு அறிக்கைகள் மற்றும் கீனிஎகடெமிக்ஸ் ஏற்பாடு செய்யும் பயிலரங்குகளுக்கான தள்ளுபடிகள் மற்றும் கீனிஈவென்ஸ்-இன் நன்மைகளையும் அனுபவிப்பார்கள்.
மலேசியாகினி சந்தாதாரர் ஆக கிளிக் செய்யுங்கள். எங்களுடன் இணையுங்கள், ஒன்றாக மலேசியாவைச் சிறப்பானதாக மாற்றுவோம், அது உலகமாகக்கூட இருக்கலாம்.
20% தள்ளுபடியுடன், மலேசியாகினியில் இங்கு பதிந்து, சந்தாதாரராக இணையுங்கள்.