20,579 புதிய நேர்வுகள், இறப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டியது

சுகாதார அமைச்சு இன்று 20,579 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது.

285 புதிய இறப்புகளுடன், இறப்பு எண்ணிக்கை 16,000-ஐத் தாண்டியது.

சிலாங்கூர், சபா மற்றும் சரவாக் ஆகிய மூன்று மாநிலங்கள் புதிய நேர்வுகளில் கிட்டத்தட்ட பாதி பங்களிப்பை வழங்கியுள்ளன.

ஜொகூர், கெடா, பினாங்கு, கிளந்தான் மற்றும் பேராக் ஆகிய நான்கு மாநிலங்களில், புதிய நோய்த்தொற்றுகள் 4 இலக்கங்களில் பதிவாகியுள்ளன்.

இதற்கிடையில் இன்று, 20,845 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,009 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 477 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (4,591), சபா (2,578), சரவாக் (2,522), ஜொகூர் (1,852), கெடா (1,755), பினாங்கு (1,378), கிளந்தான் (1,316), பேராக் (1,208), பகாங் (839), திரெங்கானு (789), கோலாலம்பூர் (680), மலாக்கா (636), நெகிரி செம்பிலான் (329), பெர்லிஸ் (56), புத்ராஜெயா (48), லாபுவான் (2).