இன்று நண்பகல் வரையிம், 19,268 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது மொத்த நேர்வுகளை 1,725,357-ஆகக் கொண்டு வந்தது.
கிள்ளான் பள்ளத்தாக்கில் தினசரி நேர்வுகள், சிலாங்கூர் 3,567, கோலாலம்பூர் 672 எனக் குறைந்து வந்துள்ளன.
இருப்பினும், மற்ற நான்கு மாநிலங்கள் – சபா, ஜொகூர், சரவாக் மற்றும் கெடா – 2,000-க்கும் மேற்பட்ட நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.
பினாங்கு, கிளந்தான், மற்றும் பேராக் 1000-க்கும் அதிகமான நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.
மேலும், இன்று 295 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 16,382– ஆக உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில் இன்று, 21,257 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,033 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 476 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
சிலாங்கூர் (3,567), சபா (2,310), ஜொகூர் (2,265), கெடா (2,084), சரவாக் (2,028), பினாங்கு (1,780), கிளந்தான் (1,308), பேராக் (1,144), பஹாங் (788), கோலாலம்பூர் (672), திரெங்கானு (544), மலாக்கா (395), நெகிரி செம்பிலான் (269), பெர்லிஸ் (71), புத்ராஜெயா (41), லாபுவான் (2).