தாக்கப்பட்டு மரணமடைந்த பாதுகாவலர் வழக்கை, கொலை வழக்காக போலீசார் மறு வகைப்படுத்தினர்

கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஈப்போவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் நீச்சல் குளத்தில், பணியில் இருந்தபோது தாக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமையன்று சுயநினைவு திரும்பாமலேயே இறந்துபோன பாதுகாவலர் வழக்கை, போலீசார் கொலை வழக்கு என்று மீண்டும் வகைப்படுத்தினர்.

பேராக் காவல்துறைத் தலைவர், மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹிட் கூறுகையில், சந்தேகநபர் மீது அதிகக் குற்றச்சாட்டுகள் விதிக்கப்படும் என்று முன்மொழிவதன் மூலம், தனது துறை இன்று வழக்கை மீண்டும் அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைத்துள்ளது என்றார்.

“கொலைக்காக, குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ், பாதிக்கப்பட்டவர் இறந்த நாளில் காவல்துறையினர் வழக்கை மறுபரிசீலனை செய்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி சாகும்வரை தூக்கிலிடப்படுவார்.

“இந்த வழக்கு இன்னும் அரசு வழக்கறிஞரின் கூடுதல் அறிவுறுத்தலுக்காக காத்திருக்கிறது,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று, டிசம்பர் 29 சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டம் பிரிவு 326-இன் கீழ், போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், கடுமையான காயங்களை ஏற்படுத்தியதற்காக சந்தேக நபர் ஜனவரி 6-ஆம் தேதி, ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாகவும், செப்டம்பர் 9-ம் தேதி வழக்கு மீண்டும் குறிப்பிடப்படும் என்றும் மியோர் ஃபரிதலத்ராஷ் கூறினார்.

சந்தேகநபரின் மகன் அந்த நேரத்தில் பொதுமக்களுக்குத் திறக்கப்படாத நீச்சல் குளத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க முயன்றதால், பாதுகாவலர் மீது சந்தேக நபரின் அதிருப்தி காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும், வெள்ளிக்கிழமை பாதுகாவலர் தனது வீட்டில் இறந்துவிட்டதாகவும், ஈப்போவில் உள்ள ராஜா பெர்மசூரி பைனுன் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனையில் நுரையீரல் தொற்று (செப்சிஸ்) மரணத்திற்கான காரணம் என்று கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், பாதுகாவலரின் குடும்ப உறுப்பினர்கள் திருப்தி அடையவில்லை மற்றும் கடந்த ஆண்டு நடந்த சம்பவம்தான் மரணத்திற்கான காரணம் என்று கூறினர்.

-பெர்னாமா