அன்வார் : மெர்டேக்கா காலனியர்களை மாற்றுவது மட்டுமல்ல, அதன் நடைமுறையும் கூட

மெர்டேக்காவின் பொருள் பிரிட்டிஷ் காலனித்துவ தலைமையை மாற்றுவது மட்டுமல்லாமல், அவர்களின் ஆட்சி முறையை இரத்து செய்வதும் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

அன்வார் தனது 64-வது மெர்டேக்கா தின உரையில், காலனித்துவவாதிகள் செய்தது போல், நாட்டைக் கொள்ளையடிக்கும் மற்றும் மக்களை ஒடுக்கும் பழக்கத்தைத் தொடராமல் இருப்பதை நாட்டின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

“சுதந்திரம் என்பது, பிரிட்டிஷ் தலைமையை மலேசியர்கள் உட்பட பூர்வீகர்களால் மாற்றுவது என்று மட்டும் அர்த்தமல்ல, பாத்திரங்கள் மாறிவிட்டன, நடைமுறைகளும் மாற வேண்டும்.

“ஆணவம், நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடித்தல், மக்களை ஒடுக்குதல், சுதந்திரத்தை மறுப்பது மற்றும் மிக முக்கியமாக சமத்துவம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் சமத்துவம் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

“இதை நாம் மெர்டேக்கா தினத்தைக் கொண்டாடும் நாளில் மதிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மலேசியர்கள் உண்மையில் சுதந்திரம் அடைந்திருக்கிறார்களா என்பதை மதிப்பிட வேண்டும் என்று அன்வார் கூறினார்.

“நாட்டின் செல்வங்களைப் பதுக்கி வைக்காத, அவர்களுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் நாட்டின் பொக்கிஷங்களை வீணாக்காத தலைவர்களை நாம் உருவாக்குகிறோமா?

“இந்தச் சுதந்திரம் மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், நகர முன்னோடிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நியாயமான பொருளாதார விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறதா?

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தனது மெர்டேக்கா தின உரையில், நாடு கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

“முக்கியமான விஷயம் என்னவென்றால், நாட்டில் நடந்த மோசமான நிகழ்வுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம், நாம் கண்ட இழப்புகளைப் பின் தள்ளி, ஆசியப் புலி என்று அறியப்படும் அளவிற்கு வெற்றி தந்த வழிகளுக்கு நாட்டைக் கொண்டு செல்ல வேண்டும்.

“இந்தச் சுதந்திரத் தினத்தில் நம் நம்பிக்கை அதுதான்,” என்று அவர் கூறினார்.