அக்டோபரில் ஐபிதி-களை மீண்டும் திறக்க கே.பி.தி. திட்டமிட்டுள்ளது

இந்த ஆண்டு அக்டோபர் முதல், தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் (பி.பி.என்) அனைத்து கட்டங்களிலும், 2021/2022 கல்வி அமர்வுக்காக மாணவர்களின் நேரடி சேர்க்கைக்காக உயர்க்கல்வி நிறுவனங்களை (ஐபிதி) மீண்டும் திறக்க உயர்க்கல்வி அமைச்சு (கே.பி.தி.) திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஐபிதி புனர்வாழ்வு திட்டத்தின் மூலம், ஆகஸ்ட் 22-ம் தேதி பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அவரது சிறப்பு செய்தியில் அறிவித்தபடி, முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஐபிதி-க்குத் திரும்புவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டாக்டர் நொரைய்னி அஹ்மத் கூறினார்.

நேற்றைய தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வில் இந்த விஷயம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“இந்த நிகழ்ச்சி நிரலில் வெற்றிபெற, இன்று பிற்பகல் நான் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனைச் சந்தித்து, ஐபிதி மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தேன்.

“இன்று பிற்பகல் எங்கள் நீண்ட விவாதம் மற்றும் நோக்கத்தின் அடிப்படையில், அக்டோபர் மாதத்திற்குள் பாதுகாப்பான கல்லூரி சமூகத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்,” என்று அவர் நேற்று முகநூல் பதிவு ஒன்றில் கூறினார்.

இதுவரை தடுப்பூசி பெறாத 648,000 மாணவர்களுக்கு, 1.296 மில்லியன் மருந்தளவு தடுப்பூசிகள் தேவை என்று கே.பி.தி. கணித்துள்ளதாகவும், ஐபிதி தடுப்பூசி மையங்களைக், குறிப்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்காக பிபிவி-களாக மாற்ற கேபிதி பரிந்துரைத்ததாகவும் அவர் கூறினார்.

மாணவர் தடுப்பூசி திட்டத்தைப் பெரிய அளவில் செயல்படுத்த உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.