ஈப்போவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில், விருந்தினரால் தாக்கப்பட்டு, இறந்துபோன பாதுகாவலரின் வழக்கு விசாரணை அறிக்கையைக் காவல்துறை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் கையளித்தது.
பேராக் காவல்துறைத் தலைவர், மியோர் ஃபரிதலத்ராஷ் வாஹித், சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தனது துறை காத்திருப்பதாகக் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் இறந்த பிறகு, குற்றவியல் சட்டம் பிரிவு 302 -இன் கீழ் இந்த வழக்கு வகைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபரை மீண்டும் கைது செய்யுமாறு சில தரப்பு அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு, தண்டனைச் சட்டம் பிரிவு 335 கீழ் சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டார் என்றார்.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளதால், அவரவர் விருப்பத்திற்கு ஊகிக்க வேண்டாம் என்றும், நாட்டின் நீதித்துறை மற்றும் நீதி அமைப்பை நம்ப வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
- பெர்னாமா