அரசாங்கம் – பி.எச். இடையில் உருமாற்றம், அரசியல் நிலைத்தன்மை ஒப்பந்தம் கையெழுத்தானது

அரசாங்கம் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி (பி.எச்.) இடையில், இன்று வரலாற்றுபூர்வ நிகழ்வொன்று நடந்தது, மாற்றம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யூ.) ஒன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம், இன்று பிற்பகல், அரசாங்கம்-பி.எச். பிரதிநிதிகளுக்கு இடையே நாடாளுமன்ற கட்டிடத்தில் கையெழுத்திடப்பட்டது.

யாங் டி-பெர்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்முஸ்தபா பில்லா ஷாவின் உத்தரவுக்கு ஏற்ப, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்திருப்பதாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியதாக அவர் தெரிவித்தார் :-

  • கோவிட் -19 திட்டத்தின் அதிகாரமளித்தல்;
  • நிர்வாக மாற்றம்;
  • நாடாளுமன்றச் சீர்திருத்தம்;
  • நீதித்துறை நிறுவனங்களின் சுதந்திரம்;
  • மலேசியா ஒப்பந்தம் எம்ஏ63; மற்றும்
  • வழிநடத்தல் குழுவை நிறுவுதல்.

ஒரு வளமான மற்றும் நிலையான மலேசியாவின் இலக்கை அடைய, அனைத்துக் தரப்பினரும் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண, ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாமன்னரின் விருப்பம் என்று அவர் கூறினார்.

“ஒற்றுமை, உடன்பாடு மற்றும் இணக்கத்தை வலியுறுத்தும் மலேசியக் குடும்பத்தின் உணர்வு இன்று மாலை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

“அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, கோவிட் -19 மாற்றம் மற்றும் பொருளாதார மீட்சியை எதிர்ப்பதில் சிறந்த நிர்வாகத்திற்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், உகந்த முதலீட்டு சூழலை ஊக்குவிக்கும், இது மலேசிய குடும்பங்களின் நல்வாழ்வுக்கு வலுவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்.

“இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மீட்பு முழுமையானதாகவும் உள்ளடக்கியதாகவும் இயங்குவதை உறுதி செய்ய முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழாவில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அன்னுவார் மூசா ஆகியோர் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராகிம், பிகேஆர் பொதுச் செயலாளர் சைஃபுதீன் நாசுதியோன், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், டிஏபி தேசிய அமைப்பு செயலாளர் அந்தோணி லோக், அமானா தலைவர் முகமட் சாபு, அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப், உப்கோ தலைவர் வில்பிரட் மேடியஸ் தங்காவ் மற்றும் உப்கோ துணைத் தலைவர் டொனால்ட் பீட்டர் மொஜூண்டின் ஆகியோர் பக்காத்தான் ஹராப்பானைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

மக்களவை சபாநாயகர் அஸார் அஜீசன் ஹாரூன் மற்றும் மேலவை தலைவர் ராயிஸ் யாத்திம் ஆகியோரும் உடனிருந்தனர்.

இஸ்மாயில் சப்ரி ஒப்பந்ததின் உள்ளடக்கங்கள் பற்றிய மேலதிக விவரங்களை வழங்கவில்லை, ஆனால் ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டதை விட அந்தப் பகுதிகள் பரந்ததாக காணப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை, ஏழு நிறுவன சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக அவர் அறிவித்தார்.

ஏழு புதுப்பிப்புகள் :-

  1. நாடாளுமன்றத்தில் கட்சி தாவல் மசோதாவை முன்வைத்தல்.
  2. வாக்களிக்கும் வயதை 21 வயதிலிருந்து, 18 வயதாகக் குறைக்கும் நடைமுறை.
  3. பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்த மத்திய அரசியலமைப்பில் திருத்தம்.
  4. நாடாளுமன்றச் சிறப்புத் தேர்வுக் குழுவின் உறுப்பினர் சமநிலை – அரசு மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை உள்ளடக்கியது.
  5. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விநியோக மசோதா உட்பட, ஒவ்வொரு மசோதாவும் கூட்டாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு செய்யப்படும்.
  6. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேசிய மீட்சி மன்றத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
  7. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, அமைச்சருக்கு இணையான ஊதியம் மற்றும் வசதிகள் வழங்கப்படும்.

எனினும், நேற்று மதியம் மேலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிடுவதாக பி.எச். முன்பு உறுதியளித்தது.