கிதப் (Github) தளத்தில் உள்ள சுகாதார அமைச்சின் தரவு, நேற்று (செப்டம்பர் 18) 324 கோவிட் -19 இறப்புகளைப் பதிவுசெய்தது, இதுவரையிலான இறப்பு எண்ணிக்கை 23,067 ஆக அதிகரித்துள்ளது.
அந்த எண்ணிக்கையில், 70 பேர் (21.6 விழுக்காடு) மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்தனர்.
அதிகபட்ச இறப்புகள், செப்டம்பர் 11-ம் தேதி (592) பதிவு செய்யப்பட்டது.
சிலாங்கூர் 146 இறப்புகளுடன் அதிக எண்ணிக்கையிலான புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இது புதிய இறப்புகளில் 45.06 விழுக்காடு ஆகும்.
மீதமுள்ள பாதிக்கப்பட்டவர்கள் ஜொகூர் (54), பினாங்கு (25), கெடா (24), பேராக் (15), சபா (13), கிளந்தான் (12), சரவாக் (11), மலாக்கா (7), கோலாலம்பூர் (7), நெகிரி செம்பிலான் (5) மற்றும் பகாங் (5) என மரண எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன.
பெர்லிஸ், திரெங்கானு, லாபுவான் மற்றும் புத்ராஜயாவில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
324 இறப்புகளில், 183 கடந்த வாரத்தில் நிகழ்ந்தன, நேற்று ஏழு இறப்புகள் மட்டுமே நிகழ்ந்தன.
நேற்று அறிவிக்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை நிலுவை காரணமாக ஒரு வாரத்திற்கு முந்தையவை.
கடந்த 30 நாட்களில் தினமும் சராசரியாக 320 கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஏழு நாட்களில் சராசரி இறப்புகளின் எண்ணிக்கை 378 ஆகும்.
முன்பு, சுகாதார அமைச்சு, புதிய நேர்வுகளுடன் இறப்பு புள்ளிவிவரங்களை ஒவ்வொரு மாலையிலும் அறிவித்தது.
ஆனால், இந்த மரண எண்ணிக்கை நள்ளிரவு 2 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டதால், மலேசியாகினி காலையில் அதனை வெளியிடுகிறது.